தமிழ்நாடு அரசு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை கொடுக்கும் திட்டத்துக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்குமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பெண் சிசுக் கொலைகளை தடுக்கும் வகையில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு 25 ஆயிரம் ரூபாய் என இரண்டு பெண் குழந்தைகளுக்கும் 50 ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு வைப்புத் தொகையாக கொடுக்கும்.
தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் இந்த தொகை முதலீடு செய்யப்பட்டு வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.
இந்த வைப்புத்தொகை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்தவுடன், வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகை பெண் குழந்தைக்கு வழங்கப்படும். இந்தப் பலனைப் பெற, பெண் குழந்தைகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுத வேண்டும்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S