Tamil News & POLLING

 

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்

1 year ago 03 டிசம்பர் 2024 02:34 PM | views : 161
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சென்னை பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து நிவாரண பொருட்களை விஜய் வழங்கினார்.

நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பில் வேஷ்டி, சட்டை, பெட்ஷீட், மளிகை சாமான்கள் என ஒரு குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் வந்து நிவாரணம் வழங்காதது ஏன்? என்று நிவாரண உதவிகளை பெற்றுக் கொண்டவர்களிடம் விஜய் விளக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்போது, உங்கள் வீடுகளுக்கு வந்து நலத்திட்ட உதவிகளை நான் வழங்கி இருக்கலாம். ஆனால், உங்களுடன் இப்படி அமர்ந்து பேச முடியாது, அங்கு வந்தால் நெரிசல் ஏற்படும். உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேச முடியாது. நேரம் செலவிட முடியாது. நேரில் வந்து நிவாரணம் வழங்கவில்லை என தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், என்று விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் TAMIL NADU தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி MK STALIN ADMK TTV DHINAKARAN காங்கிரஸ் AIADMK முக ஸ்டாலின் இந்திய அணி ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் தமிழகம் CONGRESS PMK கனமழை UDHAYANIDHI STALIN சீமான் பாமக PARLIAMENT ELECTION கொலை பிரதமர் மோடி கைது அன்புமணி ராமதாஸ் வடகிழக்கு பருவமழை COIMBATORE கோவை EDAPPADI PALANISWAMI SEEMAN KEERTHY SURESH தீபாவளி அமமுக சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் மதுரை THIRUMAVALAVAN திருநெல்வேலி தென்காசி ஓபிஎஸ் AJITH தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM நெல்லை திருமாவளவன் TAMIL ACTRESS NELLAI விடுமுறை ASSEMBLY ELECTIONS 2024 T20 WORLDCUP அஜித் தமிழக அரசு SENGOTTAIYAN MADURAI OPS ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ் வானிலை ஆய்வு மையம் டாப் நியூஸ் டிரெண்டிங் வன்னியர் தேவர் THOOTHUKUDI நயினார் நாகேந்திரன் பாலியல் தொல்லை NORTHEAST MONSOON