POLLING FLAMES

 

தனுஷ்ஷின் ரோலக்ஸ் வாட்ச் விலை தெரியுமா உங்களுக்கு?

1 year ago 26 நவம்பர் 2024 09:52 AM | views : 219
தனுஷ் மற்றும் நயன்தாராவின் சர்ச்சை கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் இருவரும் எதிரும் புதிருமாக ஒரே வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் நயன்தாரா சற்று ஓவராக தான் சென்றுள்ளார். ஆம், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமராமல் தனுஷை வெறுப்பேற்றி பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரே வரிசையில் அமர்ந்திருந்தார். அதுவும் கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளார்.


ஏற்கனவே நயன் தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு 3 பக்கத்திற்கு நயன்தாரா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பிறகு இச்சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு என்ன நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. இப்போதைக்கு இருவருமே சைலண்டாக இருக்கின்றனர்.


இந்த சர்ச்சைக்குள் நடுவில் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் திருமண நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். இசை வெளியீட்டு விழாவிற்கு வேஷ்டி சட்டையில் வரும் தனுஷ் அதே ஃபார்முலாவைத் தான் திருமண நிகழ்ச்சிக்கும் பயன்படுத்தி வருகிறார். திருமண வரவேற்பு என்றால் கோட் சூட்டிலும், திருமணம் என்றால் வேஷ்டி சட்டையில் வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இதுவே படம் ரிலீஸ் என்றால் பேட் சர்ட்டில் சென்று படம் பார்த்து வருகிறார்.


இந்த நிலையில் தான் ஆகாஷ் பாஸ்கரன் திருமண நிகழ்ச்சியில் தனுஷ் தன்னுடைய கையில் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச் இப்போது அனைவரது கவனம் ஈர்த்துள்ளது. சமீபகாலமாக ரோலக்ஸ் என்ற பெயர் தமிழ் சினிமாவில் அடிபடுகிறது. இதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வந்த விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற ஒரு கதாபாத்திரத்தில் கேமியோ கொடுத்திருப்பார்.


அது தான் அடிக்கடி ரோலக்ஸ் பற்றி பேச வைத்தது. இப்போது தனுஷின் ரோலக்ஸ் வாட்ச் கவனம் ஈர்த்து அதைப் பற்றி ஆராய வைத்துள்ளது. தனுஷ் கட்டியிருந்த வாட்சின் விலை எவ்வளவு இருக்கும்? அதனுடைய மதிப்பு என்னவாக இருக்கும் என்று பலரும் ஆராய தொடங்கியுள்ளனர். தனுஷ் தன்னுடைய கையில் கட்டியிருந்த அந்த ரோலக்ஸ் வாட்சின் மாடல் ROLEX


DAY DATE ஆம். ஆடம்பரமான வாட்சான இந்த வகை மாடல் வாட்ச் வாங்குவதற்கு பதிலாக அந்த பணத்தை வைத்து ஒரு 2 அடுக்குமாடி வீடு கூட வாங்கிவிடலாமாம்.




அந்தளவிற்கு காஸ்ட்லியான வாட்சை தான் தனுஷ் தன்னுடைய கையில் கட்டியிருந்திருக்கிறார். ROLEX DAY DATE ஒரு ஆடம்பரமான வாட்ச். கோடீஸ்வரர்கள் மட்டுமே அது போன்ற வாட்ச்களை கட்டியிருப்பார்களாம். அரேபிய எண்களால் அமைக்கப்பட்ட அந்த வாட்ச் ஜொலிக்கும் வகையில் இருக்குமாம். இதனுடைய விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,35,09,000 ஆகும். அதாவது ரூ.1.35 கோடி.



இவ்வளவு காஸ்ட்லியான வாட்சை தனுஷ் தன்னுடைய கையில் கட்டியிருக்கிறார் என்றால் அவர் எந்தளவிற்கு வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வருவார். அவருடைய நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.230 கோடி ஆகும்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU இந்திய அணி AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் கனமழை காங்கிரஸ் PMK UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் பாமக PARLIAMENT ELECTION கோவை முக ஸ்டாலின் CONGRESS INDIAN CRICKET TEAM COIMBATORE தமிழகம் EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் கைது தேவர் AJITH தமிழ்நாடு சீமான் வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக OPS பிரதமர் மோடி KEERTHY SURESH THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS NELLAI சூர்யா ஓபிஎஸ் நெல்லை SURIYA கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் திருப்பரங்குன்றம் அன்புமணி ELECTION COMMISSION விடுமுறை வடகிழக்கு பருவமழை CSK தூத்துக்குடி கள்ளக்காதல் தீபாவளி கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை தென்காசி RAJINIKANTH மதுரை அஜித்