POLLING FLAMES

 

தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!

1 year ago 27 நவம்பர் 2024 03:22 PM | views : 238
நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் இன்று (நவ. 27) தீர்ப்பளித்துள்ளது. .ஒருமித்த கருத்தின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு முன்பு தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து கோரிய வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம் இருவரும் தற்போது அதிகாரப்பூர்வமாக பிரிந்துள்ளனர்.

திருமண உறவிலிருந்து பிரிவதாக ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இருவரும் இருந்ததால், அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிபதி சுபாதேவி தீர்ப்பளித்துள்ளார்..விவாகரத்துக் கோரி மனுதமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியான தனுஷ் - ஐஸ்வர்யா, கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிவதாக கடந்த 2022ஆம் ஆண்டு அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.எனினும் கடந்த ஏப்ரல் மாதம் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தை நாடினர். இம்மனுவை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், இருவரையும் நேரில் ஆஜராகக்கோரி மூன்று முறை சம்மன் அனுப்பியது.

இருந்தபோதும் இருவரும் ஆஜராகாததால், மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது..இதனிடையே, தனுஷ், ஐஸ்வர்யாவிடம் கடந்த 21ஆம் தேதி தனி அறையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் இருவரும் பிரிவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு நவ.27 ஆம் தேதி வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது.இதன்படி, இருவருக்கும் விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி சென்னையில் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற்றது. இதன்மூலம் இவர்களின் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.இதையும் படிக்க | 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு. ****'  மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி AIADMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK பாமக காங்கிரஸ் தமிழகம் முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION CONGRESS INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் கோவை கொலை திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI அமமுக OPS சீமான் வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH தமிழ்நாடு பிரதமர் மோடி தேவர் AJITH கைது SURIYA NELLAI நெல்லை THIRUMAVALAVAN ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS சூர்யா கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION RAJINIKANTH தீபாவளி பாலியல் தொல்லை அன்புமணி கள்ளக்காதல் தென்காசி CSK வடகிழக்கு பருவமழை அஜித் மதுரை திருப்பரங்குன்றம் விடுமுறை தூத்துக்குடி