Tamil News & POLLING

 

வி.சி.க.-விற்கு, த.வெ.க. தலைவர் தூண்டில் போடுகிறார்- ஷா நவாஸ்

1 year ago 26 நவம்பர் 2024 09:50 AM | views : 166
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சீர்காழி சட்டமன்ற தொகுதி நிர்வாக சீரமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தாமு.இனியவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மேலிட பொறுப்பாளரும், நாகை தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஷா நவாஸ் பங்கேற்று பேசினார் அப்போது அவர் கூறுகையில்:-

கட்சியை மறுசீரமைத்து அதை உயிரோட்டமாக உயிர்ப்போடு வைத்திருப்பதில் முனைப்போடு இருப்பவர் நமது வி.சி.க. தலைவர் திருமாவளவன். மறு சீரமைப்பு நடவடிக்கையால் தான் தலித் அல்லாதவர்கள் இக்கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வேளச்சேரி தீர்மானம் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. பொதுமக்கள் வாக்களித்து இது பொது கட்சிதான் என அங்கீகரித்துள்ளனர்.

அதன் விளைவாக தான் இன்று 2 எம்.பி.க்கள், 4 எம்.எல்.ஏ.க்கள், கடலூரில் துணை மேயர் மற்றும் பல்வேறு நகராட்சி, ஊராட்சிகளில் உறுப்பினர்கள் என மிகப்பெரிய கட்சியாக வி.சி.க. வடிவம் பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் ஒரு நாள் கூட அரசியல் விவாதங்கள் நடைபெறுவதில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த கூட்டணியில் தொடர போகிறதா? அந்த கூட்டணிக்கு போகபோகிறதா? என்று தான் அரசியல் வட்டாரங்கள் பேசி கொண்டுள்ளனர்.

வி.சி.க. தலைவர் திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாட்டை நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக அ.தி.மு.க. கூறுகிறது. திருமாவளவன் அரசியல் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். திருமாவளவன் எடுக்கும் நிலைப்பாடு தான் இன்று அரசியலயே தீர்மானிக்க போகிறது என்ற நிலைக்கு வி.சி.க. வளர்ந்துள்ளது. புதிதாக வரக்கூடிய கட்சிகளும் யாரை எதிர்பார்க்கிறார்களோ, இல்லையோ விடுதலை சிறுத்தைகள் கட்சியை எதிர்பார்க்கின்றனர்.

விக்கிரவாண்டியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திய த.வெ.க. தலைவர் விஜய், கட்சி தூண்டிலை யாருக்கு போடுகிறார்கள் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பால அறவாழி, பரசு முருகையன், மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா, தங்க மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK AIADMK டிடிவி தினகரன் ADMK காங்கிரஸ் TAMIL NADU எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் இந்திய அணி INDIAN CRICKET TEAM ANBUMANI RAMADOSS கனமழை CONGRESS ரஜினிகாந்த் PMK சீமான் UDHAYANIDHI STALIN தமிழகம் பாமக பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION தீபாவளி EDAPPADI PALANISWAMI கோவை கைது அமமுக KEERTHY SURESH SEEMAN கொலை COIMBATORE வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் THOOTHUKUDI TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் திருநெல்வேலி TAMIL ACTRESS AJITH தென்காசி தமிழ்நாடு விடுமுறை THIRUMAVALAVAN ஓபிஎஸ் NELLAI கள்ளக்காதல் நெல்லை மதுரை வன்னியர் டாப் நியூஸ் டிரெண்டிங் 2024 T20 WORLDCUP NORTHEAST MONSOON MADURAI நயினார் நாகேந்திரன் தேவர் பாலியல் தொல்லை கொரோனா TAMIL CINEMA OPS அஜித் ELECTION COMMISSION தமிழக அரசு வானிலை ஆய்வு மையம் கீர்த்தி சுரேஷ் ASSEMBLY ELECTIONS திருப்பரங்குன்றம் SENGOTTAIYAN