POLLING FLAMES

 

தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நவ. 23-ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

1 year ago 20 நவம்பர் 2024 12:42 AM | views : 229
சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நாளை (நவ. 21) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். இதன் காரணமாக வரும் 23-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக நாளை முதல் வரும் 24-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 25-ம் தேதி கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.






கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நாளையும், தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்கு பகுதிகளில் வரும் 22-ம் தேதியும், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் வரும் 23-ம் தேதியும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கீ.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே, இந்நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS இந்திய அணி TAMIL NADU AIADMK UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் கனமழை PMK காங்கிரஸ் பாமக தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM CONGRESS முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கோவை அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE தமிழகம் AJITH தமிழ்நாடு தேவர் சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் பிரதமர் மோடி KEERTHY SURESH OPS அமமுக கைது BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் SURIYA TAMIL ACTRESS சூர்யா ஓபிஎஸ் THIRUMAVALAVAN நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா விடுமுறை அஜித் தீபாவளி கள்ளக்காதல் பாலியல் தொல்லை மதுரை ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் தென்காசி கீர்த்தி சுரேஷ் CSK அன்புமணி தூத்துக்குடி RAJINIKANTH வடகிழக்கு பருவமழை