INDIAN 7

Tamil News & polling

விஜய் பற்றி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில்!

29 அக்டோபர் 2024 03:45 PM | views : 85
Nature

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த 27 ஆம் தேதி நடந்தது. மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜயின் உரை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விஜய் பேசியது குழப்பமாக உள்ளது என்றும், கருத்தில் தெளிவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

சிலர் விஜய்யின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என்ற அறிவிப்பை வரவேற்றனர். இந்த நிலையில், த.வெ.க. மாநில மாநாட்டில் விஜய் பேசிய கருத்து குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பான கேள்விக்கு இன்று பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "இந்த விஷயம் தொடர்பாக எங்களது அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அண்ணன் பதில் அளித்துவிட்டார். அதை தவிர வேறு எதையும் கூற விரும்பவில்லை," என்று தெரிவித்தார்.

முன்னதாக விஜய் என்ன பேசினார் என்பதை பார்க்கவில்லை என்றும், பார்த்துவிட்டு பதில் அளிப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Like
1
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றுகிறார். சிறுபான்மை உரிமையை காப்போம் எனும் தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

Image தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:- தவெக vs திமுக என்பதில் ஃபைனலுக்கு வந்துவிட்டோம், அதிமுகவை அட்டாக் செய்ய வேண்டாம். தலைவர் சொன்னதைப்போல தவெக தொண்டர்கள் திமுகவை மட்டும்

Image தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என

Image சென்னை, கடந்த சட்டசபை தேர்தலில் (2021) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்