POLLING FLAMES

 

செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சர் ஆவதற்கு எந்தத் தடையும் இல்லை!

1 year ago 26 செப்டம்பர் 2024 08:45 AM | views : 242
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம், அவர் மீண்டும் அமைச்சராவதற்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை என செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ.

இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.இதன்படி தலா ரூ. 25 லட்சத்துக்கு இரண்டு நபர்கள் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் உத்தரவாதம் வழங்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். மேலும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலங்களில் ஆஜராகி செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும் எனவும், வழக்கு தொடர்பான விசாரணைக்குத் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.


இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாநிலங்களவை எம்.பி.யும், செந்தில் பாலாஜியின் வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ,`15 மாதங்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். அவரை இதற்கு மேலும் சிறையில் வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமைக்கு எதிரானது. இந்த வழக்கை நடத்திமுடிப்பதற்கும் காலதாமதம் ஆகும்.

எனவே இரண்டையும் கருத்தில்கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டபோது உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளும், செந்தில் பாலாஜிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளும் வெவ்வேறானது.முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையைப் போல செந்தில் பாலாஜி எந்த ஒரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. எனவே சட்டப்படி செந்தில் பாலாஜி அமைச்சராவதில் எந்த சிக்கலும் இல்லை’ என்றார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU AIADMK UDHAYANIDHI STALIN கனமழை பாமக காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK தமிழக வெற்றிக் கழகம் CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE தமிழகம் அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH சீமான் தமிழ்நாடு கைது பிரதமர் மோடி OPS அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் வன்னியர் THIRUMAVALAVAN நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் சூர்யா AJITH ஓபிஎஸ் BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS NELLAI SURIYA RAJINIKANTH திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION மதுரை தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை அன்புமணி தீபாவளி பாலியல் தொல்லை தென்காசி CSK கள்ளக்காதல் விடுமுறை அஜித் கீர்த்தி சுரேஷ்