POLLING FLAMES

 

இயக்குனர் மோகன் ஜி கைதுக்கான காரணம் என்ன.?

1 year ago 24 செப்டம்பர் 2024 04:30 AM | views : 225
திரௌபதி, பகாசுரன் உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜியை போலீசார் இன்று காலை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


பிரபல தமிழ் பட இயக்குனர் மோகன் ஜி, இவர் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் இந்த திரைப்படங்களில் பெண் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும், நாடகக் காதல்களையும் விமர்சித்து படத்தை இயக்கியுள்ளார். இவரது திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து நிலையில் தொடர்ந்து பாமக ஆதரவாளராகவே தன்னை காட்டிக் கொண்டு வந்தார். இந்த நிலையில் இயக்குனர் மோகன் ஜியை போலீசார் கைது செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள பதிவில், சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி மோகன் ஜி அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை. திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது என தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இயக்குனர் மோகன்ஜியை வீடியோ பதிவு ஒன்றில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலப்பதாக கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. இருந்த போதும் கைதுக்கான முழுமையான காரணம் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK TAMIL NADU ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை திருமாவளவன் தமிழகம் கொலை EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் COIMBATORE தேவர் தமிழ்நாடு பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM கைது வன்னியர் அமமுக KEERTHY SURESH சீமான் OPS தமிழக சட்டசபை தேர்தல் NELLAI SURIYA நெல்லை TAMIL ACTRESS AJITH சட்டசபை தேர்தல் கொரோனா ஓபிஎஸ் சூர்யா BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN கள்ளக்காதல் CSK அஜித் விடுமுறை தென்காசி தூத்துக்குடி ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை வடகிழக்கு பருவமழை RAJINIKANTH மதுரை தீபாவளி கீர்த்தி சுரேஷ் அன்புமணி