POLLING FLAMES

 

385-வது சென்னை நாள்

1 year ago 22 ஆகஸ்ட் 2024 07:40 AM | views : 225
இன்று (ஆகஸ்ட் 22) 385-வது சென்னை நாள் கொண்டாடப்படுகிறது. தற்போதைய சென்னை நகரம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் நகரமாக உருவானதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை நாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

17-வது நூற்றாண்டில் தற்போதைய சென்னை நகரப் பகுதி, மதராஸப்பட்டினம் என்ற பெயரில் விஜயநகர பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது. மதராஸப்பட்டினத்தை 22 ஆகஸ்ட் 1639-ல் வாங்கியது கிழக்கிந்திய கம்பெனி. அதன் பிறகு 1640-ல் கடலோரத்தை ஒட்டி புனித ஜார்ஜ் கோட்டை கட்டும் பணி தொடங்கப்பட்டு 1644-ல் கட்டி முடிக்கப்பட்டது.

புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் நகரம் உருவானது. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் மெட்ராஸ் மாகாணத்தின் தலைநகராக விளங்கியது மெட்ராஸ் நகரம்.சுதந்திரத்துக்கு பிறகு 1950-களில் மேற்கொள்ளப்பட்ட மாநில மறுசீரமைப்பில் ஆந்திர பிரதேசம், கேரளா, கர்நாடகம், மெட்ராஸ் என தனித்தனி மாநிலங்கள் உருவாகின. இதில் மெட்ராஸ் மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது மெட்ராஸ் நகரம்.

அன்றைய அண்ணா தலைமையிலான திமுக அரசால் 14 ஜனவரி 1969-ல் மெட்ராஸ் மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. பிறகு, 17 ஜூலை 1996-ல் மெட்ராஸ் நகரை சென்னை என்று பெயர் மாற்றியது தமிழக அரசு.

சென்னை நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, `சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை! இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்! பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்!’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் இந்திய அணி TAMIL NADU AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் பாமக UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை PMK CONGRESS கோவை INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI தமிழகம் COIMBATORE திருமாவளவன் பிரதமர் மோடி KEERTHY SURESH தேவர் வன்னியர் தமிழ்நாடு AJITH சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM OPS அமமுக கைது ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் சூர்யா SURIYA TAMIL ACTRESS THIRUMAVALAVAN நெல்லை கொரோனா NELLAI தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை தீபாவளி பாலியல் தொல்லை மதுரை ELECTION COMMISSION அஜித் திருப்பரங்குன்றம் தென்காசி கீர்த்தி சுரேஷ் CSK அன்புமணி தூத்துக்குடி கள்ளக்காதல் RAJINIKANTH வடகிழக்கு பருவமழை