POLLING FLAMES

 

பெண் டாக்டர் பலாத்காரம்: தடயத்தை மறைத்த கொலையாளி சிக்கியது எப்படி?

1 year ago 12 ஆகஸ்ட் 2024 07:29 AM | views : 240
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் சிவிக் போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவிகளைச் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்துவந்தவன் இந்த சஞ்சய் ராய். கடந்த 8-ந் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவரைக் பலாத்காரம் கொலை செய்துள்ளான்.

சம்பவத்தன்று அதிகாலையில் அவன் மருத்துவமனைக்குள் நுழைந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதன் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் சஞ்சய் ராயைப் பிடித்து விசாரித்த போது அவர் பெண் மருத்துவரைக் கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

முதல் கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பெண் டாக்டரின் கண்கள், வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் இருந்து ரத்தம் கொட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இடது கால், வலது கை, மோதிர விரல் மற்றும் உதடுகளிலும் காயங்கள் இருந்ததாக கூறப் பட்டுள்ளது. இந்நிலையில் கைதான சஞ்சய் ராயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கொலை செய்த பிறகு சஞ்சய் ராய் மீண்டும் தான் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று மறுநாள் காலை வெகுநேரம் வரை தூங்கி உள்ளான்.

பின்னர் எழுந்ததும் தடயங்களை அழிக்க முடிவு செய்து, கொலை செய்த போது தான் அணிந்திருந்த ஆடைகளைத் துவைத்ததாக போலீசார் தெரிவித்தனர். சஞ்சய் அணிந்திருந்த காலனிகளில் ரத்தகரைகள் படிந்திருந்ததை சோதனையின் போது கண்டு பிடித்ததாகவும் போலீசார் கூறினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இறுதி பிரேத பரிசோதனை அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம், சம்பவம் நடந்த அன்றைய இரவு பணியிலிருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தி சி.சி.டி.வி. காட்சிகளையும் சரிபார்த்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக தமிழகம் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் கோவை CONGRESS கொலை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI COIMBATORE TAMILAGA VETTRI KAZHAGAM OPS KEERTHY SURESH பிரதமர் மோடி AJITH கைது தேவர் அமமுக சீமான் வன்னியர் தமிழ்நாடு THIRUMAVALAVAN சூர்யா சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS கொரோனா நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் SURIYA ஓபிஎஸ் ELECTION COMMISSION தீபாவளி விடுமுறை பாலியல் தொல்லை தென்காசி திருப்பரங்குன்றம் அஜித் RAJINIKANTH மதுரை CSK வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் அன்புமணி தூத்துக்குடி