POLLING FLAMES

 

காங்., பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கில் திணறும் காவல்துறை!

2 years ago 06 மே 2024 05:12 AM | views : 248
காங்., பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மர்ம மரண வழக்கில் திணறும் காவல்துறை : 8 தனிப்படைகள் அமைப்பு..!!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன்தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.


நேற்று உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம் என்ற பெயரில் 2 கடிதங்களை ஜெயக்குமார் எழுதியிருந்தார்.

இந்நிலையில், ஜெயக்குமார் மரண வழக்கு வேகமெடுக்கிறது. நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், மூத்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.


ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்தறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்தில், வழக்கு தொடர்பாக கிடைத்த முதற்கட்ட விவரங்களை கொண்டு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 7 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் MK STALIN பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU இந்திய அணி PMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN கனமழை பாமக ரஜினிகாந்த் CONGRESS முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கோவை INDIAN CRICKET TEAM திருமாவளவன் தமிழகம் அன்புமணி ராமதாஸ் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI தமிழ்நாடு தேவர் வன்னியர் அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி சீமான் கைது OPS KEERTHY SURESH தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS SURIYA கொரோனா சூர்யா சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN நெல்லை NELLAI ஓபிஎஸ் AJITH தீபாவளி அன்புமணி திருப்பரங்குன்றம் தூத்துக்குடி மதுரை வடகிழக்கு பருவமழை தென்காசி கள்ளக்காதல் ELECTION COMMISSION பாலியல் தொல்லை அஜித் CSK விடுமுறை RAJINIKANTH கீர்த்தி சுரேஷ்