Tamil News & POLLING

 

காங்கிரஸ் வேட்பாளர்கள் விற்பனை! காங்கிரஸைக் காப்பாற்ற முடியாது : ஜோதிமணி எம்.பி.

3 hours ago 27 மார்ச் 2026 04:17 PM | views : 69

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.


தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், காங்கிரஸ் தொகுதி தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விமர்ச்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை.


வெளிப்படைத்தன்மையோடும், விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்படவேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது.


காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத்திண்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது.


இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்,சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும்,உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது .

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI MK STALIN டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS TAMIL NADU TTV DHINAKARAN AIADMK மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி ADMK பாராளுமன்ற தேர்தல் PMK முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் பாமக ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் கனமழை அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் தமிழகம் CONGRESS தமிழ்நாடு சீமான் கோவை சட்டசபை தேர்தல் கொலை COIMBATORE UDHAYANIDHI STALIN KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI AJITH வடகிழக்கு பருவமழை கைது அமமுக பிரதமர் மோடி INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION இந்திய அணி தீபாவளி OPS வன்னியர் மதுரை விடுமுறை NELLAI நெல்லை தென்காசி தேவர் TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் அஜித் நடிகை NORTHEAST MONSOON பாலியல் தொல்லை ஓபிஎஸ் SEEMAN MADURAI டாப் நியூஸ் டிரெண்டிங் CSK THIRUMAVALAVAN SURIYA திருப்பரங்குன்றம் PRIME MINISTER MODI கள்ளக்காதல்