Tamil News & POLLING

 

திமுக - காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் 5 தொகுதிகள் இழுபறி; 23 தொகுதிகள் உறுதியானது!

2 hours ago 27 மார்ச் 2026 05:08 PM | views : 98

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.


தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 28 தொகுதிகள் எவை என்பது குறித்து திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. அதன்படி, திமுக ஒதுக்கிய 23 தொகுதிகளை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், எஞ்சிய 5 தொகுதிகள் தொடர்பாக திமுக ஒதுக்கிய தொகுதிகளுக்கு மாற்றாக வேறு தொகுதிகளை காங்கிரஸ் கேட்டு வருகிறது.


இதனால் திமுக - காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக, ஸ்ரீவைகுண்டம் போன்ற தொகுதியை காங்கிரஸ் கேட்பதாகவும் , அதற்கு திமுக மறுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 23 தொகுதிகள் எவை என்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி,


  • 1) பொன்னேரி (தனி)
  • 2) திருப்பெரும்புதூர் (தனி)
  • 3) சோளிங்கர்
  • 4) உதகமண்டலம்
  • 5) ஈரோடு கிழக்கு
  • 6) அறந்தாங்கி
  • 7) கடலூர்
  • 8) மயிலாடுதுறை
  • 9) காரைக்குடி
  • 10) சிவகாசி
  • 11) திருவாடானை
  • 13) நாங்குநேரி
  • 14) குளச்சல்
  • 15) விளவங்கோடு
  • 16) கிள்ளியூர்
  • 17) வேளச்சேரி
  • 18) ஊத்தங்கரை (தனி)
  • 19) துறையூர் (தனி)
  • 20) ஆத்தூர் (தனி)
  • 21) சிங்காநல்லூர்
  • 22) கிருஷ்ணகிரி
  • 23) அம்பாசமுத்திரம்


ஆகிய தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 5 தொகுதிகள் எவை என்பதில் இழுபறி நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


முன்னதாக, காங்கிரசுடனான தொகுதி ஒதுக்கீடு இறுதியான உடன் திமுக வேட்பாளர்கள் (164) பட்டியலுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினாவில் உள்ள தனது தந்தை கருணாநிதியின் நினைவிடத்திற்கு செல்லவிருந்ததாக தகவல் வெளியானது.


ஆனால், காங்கிரசுடனான தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி ஏற்பட்டதால் கருணாநிதி நினைவிடத்திற்கு செல்லும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் ஒத்திவைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI MK STALIN டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS TAMIL NADU TTV DHINAKARAN AIADMK மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி ADMK பாராளுமன்ற தேர்தல் PMK முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் பாமக ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் கனமழை அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் தமிழகம் CONGRESS தமிழ்நாடு சீமான் கோவை சட்டசபை தேர்தல் கொலை COIMBATORE UDHAYANIDHI STALIN KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI AJITH வடகிழக்கு பருவமழை கைது அமமுக பிரதமர் மோடி INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION இந்திய அணி தீபாவளி OPS வன்னியர் மதுரை விடுமுறை NELLAI நெல்லை தென்காசி தேவர் TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் அஜித் நடிகை NORTHEAST MONSOON பாலியல் தொல்லை ஓபிஎஸ் SEEMAN MADURAI டாப் நியூஸ் டிரெண்டிங் CSK THIRUMAVALAVAN SURIYA திருப்பரங்குன்றம் PRIME MINISTER MODI கள்ளக்காதல்