POLLING FLAMES

 

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம்

2 years ago 24 ஏப்ரல் 2024 01:23 AM | views : 236
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இதையறிந்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், இருவரையும் கண்டித்து எச்சரித்த நிலையில், காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல ஆர்த்தி திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு, தேவகோட்டை அருகேயுள்ள இலக்கினி வயல் காட்டுப்பகுதிக்கு ஸ்ரீகாந்தை மது அருந்த அழைத்துச் சென்ற இளையராஜா, அங்கு தன் நண்பர்களுடன் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டிக் கொன்று புதைத்துள்ளார்.

இதையடுத்து, குடும்ப பிரச்சனையால் கணவர் கோபித்துக்கொண்டு வெளியூர் சென்று விட்டதாக கூறி சுமார் இரண்டரை வருடங்களாக ஆர்த்தி நாடகமாடி வந்துள்ளார். இதனிடையே ஶ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நடந்த விசாரணையில் ஶ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டதும், அவரது மனைவி ஆர்த்தி, இளையராஜா மற்றும் அவரது நண்பர்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதும் உறுதியானது.

இந்த நிலையில் ஆர்த்தி, இளையராஜா மற்றும் அவரது நண்பர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக தமிழகம் CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் INDIAN CRICKET TEAM கோவை திருமாவளவன் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு OPS அமமுக AJITH KEERTHY SURESH வன்னியர் சீமான் கைது தேவர் பிரதமர் மோடி ஓபிஎஸ் NELLAI சட்டசபை தேர்தல் கொரோனா SURIYA சூர்யா BIGG BOSS TAMIL நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS THIRUMAVALAVAN CSK விடுமுறை தீபாவளி ELECTION COMMISSION பாலியல் தொல்லை தென்காசி RAJINIKANTH வடகிழக்கு பருவமழை அஜித் தூத்துக்குடி அன்புமணி மதுரை கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் கீர்த்தி சுரேஷ்