Tamil News & POLLING

 

தென்காசி,காரைக்குடி, நாகர்கோவிலில் நாளை அமித்ஷா ரோடு-ஷோ

1 year ago 04 ஏப்ரல் 2024 06:00 AM | views : 144
முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தமிழகத்தில் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழகம் வருகை தரும் அவர் 3 இடங்களில் ரோடு-ஷோ நடத்தி வாக்கு சேகரிக்கிறார்.

அதற்காக அமித்ஷா இன்று இரவு மதுரை வருகிறார். பின்னர் பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கும் அவர் நாளை காலை 9 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் காரைக்குடி செல்கிறார். அங்கு சிவகங்கை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவநாதன் யாதவிற்கு வாக்குகளை கேட்டு ரோடு-ஷோ நடத்துகிறார்.

முன்னதாக காலை 10 மணியளவில் அழகப்பா பல்கலைக்கழக ஹெலிபேட் தளத்தில் இறங்கி அங்கிருந்து காரில் பெரியார் சிலை வந்தடைகிறார். தொடர்ந்து பெரியார் சிலை முதல் அண்ணாசிலை வரை சாலையில் நடந்து சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்கிறார். அவருடன் வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.

இதையடுத்து ஹெலிகாப்டரில் தென்காசி செல்லும் அமித்ஷா, இலஞ்சி அருகேயுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறார். தொடர்ந்து தென்காசி ஆசாத் நகர் முதல் பழைய பஸ் நிலையம் வரை சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு நடந்து சென்று ரோடு-ஷோ மூலம் ஆதரவு திரட்டுகிறார். பின்னர் அவர் நாகர்கோவிலில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். முன்னதாக மதுரையில் இன்று இரவு பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் பிரசார திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI AMMK ADMK எடப்பாடி பழனிசாமி AIADMK டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU MK STALIN காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் PMK UDHAYANIDHI STALIN கனமழை இந்திய அணி INDIAN CRICKET TEAM தமிழகம் ரஜினிகாந்த் சீமான் பாமக CONGRESS பிரதமர் மோடி PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தல் KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI COIMBATORE கோவை NELLAI தீபாவளி அமமுக வடகிழக்கு பருவமழை கைது கொலை TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை தமிழ்நாடு TAMIL ACTRESS தென்காசி கள்ளக்காதல் OPS திருமாவளவன் SEEMAN THIRUMAVALAVAN திருநெல்வேலி நெல்லை AJITH கீர்த்தி சுரேஷ் விடுமுறை தமிழக அரசு SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் 2024 T20 WORLDCUP THOOTHUKUDI கொரோனா ஓபிஎஸ் ASSEMBLY ELECTIONS TAMIL CINEMA MADURAI வன்னியர் தேவர் வானிலை ஆய்வு மையம் அஜித் டிரெண்டிங் டாப் நியூஸ் NORTHEAST MONSOON நடிகை ELECTION COMMISSION