POLLING FLAMES

 

கச்சத்தீவை மீட்கும் பணிகளை தொடங்கியாச்சு - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை

2 years ago 02 ஏப்ரல் 2024 07:40 AM | views : 217
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரை வார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தி.மு.க., 10 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் நேரத்தில் இந்த விவகாரத்தை கொண்டுவருவது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது;கச்சத்தீவு வேண்டும் என்பதே எங்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. அதன் பிறகு இதற்கான ஒவ்வொரு பணிகளையும் செய்துகொண்டிருக்கிறோம். கச்சத்தீவை மீட்பதற்கான முக்கிய நோக்கம், அப்போதுதான் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும். இலங்கை அரசிடம் பேசி, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி பெறுவோமா அல்லது கச்சத்தீவை தமிழக மீனவர்கள் பயன்படுத்த அனுமதி பெறுவோமா அல்லது கச்சத்தீவையே திரும்ப கேட்போமா என்பது குறித்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஆலோசித்து வந்தோம்.

கச்சத்தீவு பிரச்சனைக்கான தீர்வை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். அறிவியல் பூர்வமாக, சட்ட ரீதியாக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை நான் உங்களிடம் தெரிவிக்கிறேன். கச்சத்தீவை மீட்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காதவர்கள், தற்போது என் மீது பாய்வது என்ன நியாயம்? " இவ்வாறு அவர் கூறினார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU PMK INDIAN CRICKET TEAM காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN கனமழை பாமக CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் கொலை தமிழகம் திருமாவளவன் COIMBATORE கைது தேவர் சீமான் தமிழ்நாடு பிரதமர் மோடி OPS அமமுக வன்னியர் KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா BIGG BOSS TAMIL SURIYA சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS AJITH THIRUMAVALAVAN NELLAI நெல்லை ஓபிஎஸ் ELECTION COMMISSION கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் வடகிழக்கு பருவமழை அன்புமணி மதுரை RAJINIKANTH தீபாவளி CSK கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை விடுமுறை தென்காசி தூத்துக்குடி அஜித்