POLLING FLAMES

 

வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை- சேவை கடுமையாக பாதிக்கும் அபாயம்

2 years ago 25 மார்ச் 2024 08:11 AM | views : 227
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தொடர்ச்சியாக 4 நாட்கள் மூடப்படுகிறது. புனித வெள்ளியை முன்னிட்டு 29-ந்தேதி வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். மறுநாள் (சனிக் கிழமை) மாதத்தின் 4-வது வாரம் என்பதால் வங்கிக்கு விடுமுறையாகும்.

31-ந்தேதி ஞாயிற்றுக் கிழமை நடப்பு நிதியாண்டு கணக்குகள் முடிக்கப்படுகிறது. இந்த வருடம் விடுமுறை நாளில் ஆண்டு கணக்கு முடிக்கக்கூடிய சூழல் வந்துள்ளதால் அன்று பெரும்பாலான வங்கிகள் மூடப்படும். அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிகள் மட்டும் செயல்படும்.

ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக பொதுமக்களுக்கான சேவை கிடையாது. ஆனால் வங்கிகள் திறந்து இருக்கும். வங்கிகள் 4 நாட்கள் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை உள்ளது.

ஆண்டு இறுதி கணக்கு முடிக்கும் நாள் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும் நாள் ஆகியவை அடுத்தடுத்து வருவதால் வங்கிகள் செயல்படாது. நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.இதுகுறித்து அகில இந்திய வங்கிஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-

புனித வெள்ளி விடுமுறை நாட்களோடு சனி, ஞாயிறு விடுமுறையும் சேர்ந்து வருவதால் தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை உள்ளது. மேலும் ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்கிற்காக பொது மக்களுக்கான சேவை கிடையாது. ஆனால் வங்கிகள் செயல்படும்.எனவே வரும் நாட்கள் தொடர் விடுமுறையால் வங்கி சேவை பாதிக்ககூடும். பணம்மற்றும் காசோலை பரிவர்த்தனை முடங்கும். சிறு தொழில் செய்வோர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல் போன்ற பணிகள் பாதிக்கும். ஏ.டி.எம். மையங்கள் முழு கொள்ளளவோடு செயல்படும். பணம் தீர்ந்தாலும் உடனே வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU AIADMK UDHAYANIDHI STALIN கனமழை பாமக காங்கிரஸ் ரஜினிகாந்த் PMK தமிழக வெற்றிக் கழகம் CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM கொலை EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE தமிழகம் அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH சீமான் தமிழ்நாடு கைது பிரதமர் மோடி OPS அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் வன்னியர் THIRUMAVALAVAN நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் சூர்யா AJITH ஓபிஎஸ் BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS NELLAI SURIYA RAJINIKANTH திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION மதுரை தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை அன்புமணி தீபாவளி பாலியல் தொல்லை தென்காசி CSK கள்ளக்காதல் விடுமுறை அஜித் கீர்த்தி சுரேஷ்