நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வட மாநிலத்தை சேர்ந்த மக்கள் இன்று முதலே வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- நாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஹோலி நல்வாழ்த்துக்கள். பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பாரம்பரிய திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.