Tamil News & POLLING

 

ஆன்மிகத்தையும் அரசியலையும் பிரித்து பார்க்க கூடாது- அண்ணாமலை

1 year ago 25 மார்ச் 2024 08:12 AM | views : 149
கோவை:தமிழக பா.ஜனதா தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை இன்று பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளாரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினார். மேலும் அங்குள்ள கோவிலில் வழிபாடும் நடத்தினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-கோவையில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.



எனவே இந்த விஷயத்தில் அரசு மெத்தனபோக்கு காட்டாமல் விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் அரசியலை தாண்டி சிறுவாணி தண்ணீரை பெறுவதற்கு, கேரள அரசுடன் பேசி, தண்ணீரை கொண்டு வர தி.மு.க. அரசு முயற்சிக்க வேண்டும்.குளங்களுக்கு நீர் வரும் பாதையை தூர்வாருவதற்கு மத்திய அரசு பலகோடி நிதிகளை ஒதுக்கினாலும், தமிழக அரசு அதனை சரியான முறையில் கையாளுவது இல்லை.



தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை வந்துவிடக்கூடாது என பிரதமர் நினைக்கிறார். இதற்காக தான் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதியை ஆளும் அரசு சரியாக பயன்படுத்துவதில்லை.அதே போல பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக குடி தண்ணீர் கிடைக்கும் வகையில் ஜல்சக்தி திட்டம் உருவாக்கப்பட்டது.ஆனால் தமிழகத்தில் அத்திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதுடன், அதில் முறைகேடும் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய அரசால் வழங்கப்படுகின்ற நிதி வீணடிக்கப்படுகிறது.



எப்பவுமே அரசியல் என்பது அறம் சார்ந்து இருக்க வேண்டும். ஆன்மிகத்தையும், அரசியலையும் பிரித்து பார்க்க கூடாது. எப்பொழுது எல்லாம் அரசியலில் அரசியல்வாதிகள் தவறு செய்கிறார்களோ, அந்த சமயத்தில் அவர்கள், ஆதீனங்கள், குருமார்களை சந்தித்து அறிவுரைகளை பெற்று, அதனை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை TVK BJP தவெக ANNAMALAI AMMK TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN AIADMK ADMK MK STALIN பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் UDHAYANIDHI STALIN இந்திய அணி PMK கனமழை ரஜினிகாந்த் INDIAN CRICKET TEAM சீமான் பாமக CONGRESS கொலை பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் கைது அமமுக EDAPPADI PALANISWAMI PARLIAMENT ELECTION வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் KEERTHY SURESH தீபாவளி COIMBATORE கோவை தென்காசி THIRUMAVALAVAN திருமாவளவன் விடுமுறை TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை தமிழ்நாடு AJITH TAMIL ACTRESS நெல்லை NELLAI கள்ளக்காதல் SEEMAN திருநெல்வேலி ஓபிஎஸ் OPS நடிகை ELECTION COMMISSION 2024 T20 WORLDCUP மழை டிரெண்டிங் டாப் நியூஸ் THOOTHUKUDI NORTHEAST MONSOON வன்னியர் திருப்பரங்குன்றம் வானிலை ஆய்வு மையம் கீர்த்தி சுரேஷ் ASSEMBLY ELECTIONS பாலியல் தொல்லை MADURAI அஜித் தேவர் தமிழக அரசு