POLLING FLAMES

 

தூத்துக்குடியில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு

2 years ago 05 மார்ச் 2024 07:29 AM | views : 252
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் விநியோகம் கடந்த 19-ந்தேதி தொடங்கியது.போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனு மார்ச் 1-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் 7-ந்தேதி மாலை 6 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி. கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்தார்.ஏற்கனவே கனிமொழி பெயரில் 70க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

2019 தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி, மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.விருப்ப மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில்,* தூத்துக்குடி தொகுதியில் 5 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளேன்.* மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு உள்ளேன்.* மறுபடியும் அங்கு பணியாற்ற வாய்ப்பு கேட்டு உள்ளேன்.* வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அடுத்த 5 ஆண்டுக்கான திட்டங்களை தெரிவிப்பேன் என்று கூறினார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK TAMIL NADU இந்திய அணி ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் கனமழை ரஜினிகாந்த் PMK பாமக முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM கோவை PARLIAMENT ELECTION CONGRESS தமிழகம் கொலை COIMBATORE EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் கைது KEERTHY SURESH பிரதமர் மோடி சீமான் தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் அமமுக OPS வன்னியர் NELLAI தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS சூர்யா நெல்லை SURIYA AJITH BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் கொரோனா ஓபிஎஸ் THIRUMAVALAVAN விடுமுறை ELECTION COMMISSION அஜித் கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை பாலியல் தொல்லை தென்காசி கள்ளக்காதல் CSK அன்புமணி மதுரை தீபாவளி திருப்பரங்குன்றம் RAJINIKANTH தூத்துக்குடி