POLLING FLAMES

 

பிரபல ஆபாச பட நடிகை மர்ம மரணம்

2 years ago 12 ஜனவரி 2024 12:47 PM | views : 264
பெரு நாட்டைச் சேர்ந்த நடிகை தைனா ஃபீல்ட்ஸ். இவர் திரைத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில் அவர் சந்தித்த பிரச்சினைகள் குறித்தும், பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்தும் கூறியிருந்தார். பொதுவாக, போர்னோ திரைத் துறைக்குப் பின்னால் நடிகைகள் அனுபவிக்கும் பாலியல் சித்திரவதைகள் பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. அதை அம்பலப்படுத்திய இவர், "என்னை அழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பார்கள். இதையெல்லாம் கடந்து நான் வீட்டுக்குச் சென்றவுடன் குளித்துவிட்டு, மனமுடைந்து அழுவேன். பல சமயங்களில் எனக்கு அப்படி நடந்திருக்கிறது. இந்தச் சமூகத்தில் ஒரு பெண்ணாக வாழ்வது மிகவும் கஷ்டமானது. அதைவிட அடல்ட் கன்டென்ட் கிரியேட்டராக இந்தச் சமூகத்தில் வாழ்வது என்பது மிகக் கொடுமையானது''என வெளிப்படையாக பேசியது சர்வதேச அளவில் பேசுபொருளானது.

இந்நிலையில், பெரு நாட்டின் ட்ரூஜில்லோ நகரில் உள்ள வீட்டில் நடிகை தைனா பீல்ட்ஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தற்போது அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK TAMIL NADU ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக கோவை CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் COIMBATORE தமிழகம் கொலை EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் வன்னியர் தமிழ்நாடு பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் கைது அமமுக KEERTHY SURESH சீமான் OPS தமிழக சட்டசபை தேர்தல் NELLAI SURIYA நெல்லை TAMIL ACTRESS AJITH சட்டசபை தேர்தல் கொரோனா ஓபிஎஸ் சூர்யா BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN கள்ளக்காதல் CSK அஜித் விடுமுறை தென்காசி தூத்துக்குடி ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை வடகிழக்கு பருவமழை RAJINIKANTH மதுரை தீபாவளி கீர்த்தி சுரேஷ் அன்புமணி