Tamil News & POLLING

 

ஏற்றி விடும் ஏணிகளை எட்டி உதைக்கும் வடிவேலு!

2 years ago 09 ஜனவரி 2024 09:57 AM | views : 171
ஏற்றி விடும் ஏணிகளை எட்டி உதைக்கும் வடிவேலு:

சில தினங்களுக்கு முன்பு கலைஞர் 100 நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாமேடைக்கு கார் பார்க்கிங்கில் இருந்து பேட்டரி கார் மூலம் முக்கிய திரையுலகினர் அழைத்து செல்லப்பட்டனர். அதில் ஆறேழு பேர் பயணம் செய்யலாம்.

ஆளுக்கு ஒரு பேட்டரி கார் வருமென நினைத்திருந்தார்கள். ஆனால் ஏற்கனவே சோனியா அகர்வால் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே நயன்தாரா அமர வைக்கப்பட்டதால்..அப்செட் ஆனார் அவர்.

அடுத்து வடிவேலு வந்தார். பேட்டரி காரில் ராஜ்கிரணுக்கு அருகே அமர்வோம் என அவர் எதிர்பார்க்கவில்லை. அதனால் கடுப்பான வடிவேலு... உடனே வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு கீழே இறங்கிவிட்டார். ராஜ்கிரணை ஏறிட்டு கூட பார்க்கவில்லை.

அதன்பிறகு வந்த பேட்டரி காரில் டிரைவருக்கு அருகே அமர்ந்து விழா மேடைக்கு சென்றார். நிகழ்ச்சியில் பேசியும், பாடியும் கைத்தட்டல் வாங்க ஒத்திகை பார்த்துவிட்டு வந்தவருக்கு... அந்த வாய்ப்பு அமையாமல் போனதால் அதிருப்தி அடைந்தார்.

வடிவேலுவின் வளர்ச்சிக்கு வாய்ப்பு அளித்தவர்கள் ராஜ்கிரணும், கேப்டனும். டி.ராஜேந்திரன் என் தங்கை கல்யாணி படத்தில் அறிமுகமாகி அதில் சில நொடிகள் நடித்தார்.

அதன்பிறகு முறைப்படி அவரை அழைத்து காமடி கேரக்டரும், ஒரு பாடல் காட்சியும் அளித்து உதவியர் ராஜ்கிரண். அடுத்து சின்னக்கவுண்டரில் வாய்ப்பு தந்தார் விஜயகாந்த்.

என் ராசாவின் மனசில், சின்னக்கவுண்டர் படங்களில் ஏற்கனவே கவுண்டமணி, செந்தில் போன்ற காமெடியன்கள் இருக்கும்போது இவர் எதற்கு என மற்றவர்கள் கூறியும் 'பரவாயில்லை. திறமைசாலி. வாய்ப்பு அளிக்கலாம்' எனக்கூறி கைதூக்கி விட்டார்கள் ராஜ்கிரணும், கேப்டனும்.

தனக்கு வாழ்வளித்த ராஜ்கிரணை கூட பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார் வடிவேலு.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI AMMK MK STALIN AIADMK காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி ADMK TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM ANBUMANI RAMADOSS PMK கனமழை தமிழகம் ரஜினிகாந்த் சீமான் CONGRESS UDHAYANIDHI STALIN பாமக அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி கைது வடகிழக்கு பருவமழை அமமுக EDAPPADI PALANISWAMI COIMBATORE கோவை கொலை SEEMAN KEERTHY SURESH சட்டசபை தேர்தல் தீபாவளி TAMIL ACTRESS கள்ளக்காதல் தென்காசி THIRUMAVALAVAN NELLAI நெல்லை திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM திருநெல்வேலி மதுரை ஓபிஎஸ் தமிழ்நாடு AJITH விடுமுறை THOOTHUKUDI OPS வானிலை ஆய்வு மையம் SENGOTTAIYAN திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION 2024 T20 WORLDCUP நயினார் நாகேந்திரன் வன்னியர் கீர்த்தி சுரேஷ் ASSEMBLY ELECTIONS அஜித் பாலியல் தொல்லை டாப் நியூஸ் டிரெண்டிங் தமிழக அரசு NORTHEAST MONSOON தேவர் MADURAI