POLLING FLAMES

 

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை - நடிகர் ரஜினிகாந்த்

4 years ago 12 ஜூலை 2021 08:10 AM | views : 237
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.1 மணி நேரம் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். அதில், ரஜினி மக்கள் மன்றத்தின் நிலைமை குறித்து மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு விளக்க வேண்டியது தன்னுடைய கடமை என்றும், அரசியலில் ஈடுபடும் நோக்கில் மக்கள் மன்றத்தை தொடங்கி பல பதவிகள், சார்பு அணிகள் உருவாக்கியதாகவும் கூறி உள்ளார். கால சூழலால் நினைத்தது சாத்தியப்படவில்லை என்று குறிப்பிட்டு உள்ள அவர், ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக தெரிவித்து உள்ளார்.வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியுள்ள ரஜினிகாந்த்,....இனி ரஜினி மக்கள் மன்றம் சார்பு அணிகள் எதுவும் இன்றி, ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அறிவித்து உள்ளார். மேலும், தனது அறிக்கையின் இறுதியில் வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் என்றும் ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU ரஜினிகாந்த் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK UDHAYANIDHI STALIN பாமக முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM கோவை CONGRESS COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் தமிழகம் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM OPS பிரதமர் மோடி வன்னியர் தேவர் அமமுக KEERTHY SURESH சீமான் சட்டசபை தேர்தல் SURIYA கைது THIRUMAVALAVAN தமிழக சட்டசபை தேர்தல் தீபாவளி ஓபிஎஸ் TAMIL ACTRESS கொரோனா NELLAI சூர்யா நெல்லை AJITH BIGG BOSS TAMIL ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH CSK விடுமுறை மதுரை கள்ளக்காதல் அஜித் திருப்பரங்குன்றம் தூத்துக்குடி தென்காசி அன்புமணி