POLLING FLAMES

 

நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

4 months ago 12 டிசம்பர் 2025 07:57 AM | views : 314
சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் காலையிலேயே அவருக்கு வாழ்த்து கூறுவதற்காக அவருடைய இல்லத்தின் முன்பு குவிந்தனர். அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இன்று 75 ஆவது பிறந்த நாள் கொண்டாடும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், ஐம்பது ஆண்டுகளாக, இந்திய திரையுலகின் உச்சத்தில் இருப்பவர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, மூன்று தலைமுறைகளை தனது வசீகரத்தால் ஈர்த்திருப்பவர்.

சிறந்த தேசியவாதியும், பண்பாளருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மேலும் பல்லாண்டுகள் நலமுடன், ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டி கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் பாமக PMK தமிழகம் CONGRESS கோவை PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் கொலை EDAPPADI PALANISWAMI COIMBATORE திருமாவளவன் சீமான் AJITH தேவர் OPS கைது KEERTHY SURESH தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM வன்னியர் அமமுக பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS நெல்லை SURIYA ஓபிஎஸ் கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா NELLAI BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN தென்காசி விடுமுறை அஜித் மதுரை தூத்துக்குடி பாலியல் தொல்லை கள்ளக்காதல் ELECTION COMMISSION CSK வடகிழக்கு பருவமழை RAJINIKANTH கீர்த்தி சுரேஷ் அன்புமணி தீபாவளி திருப்பரங்குன்றம்