POLLING FLAMES

 

ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவு - மறைந்த தாயின் காலை பிடித்து அழுத ஓபிஎஸ்

3 years ago 25 பிப்ரவரி 2023 01:26 AM | views : 241
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (95). நேற்று முன்தினம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் நேற்று மருத்துவமனைக்குச் சென்று அவரது தாயாரைப் பார்த்து வந்தார்.

அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு விசாரித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் தாயாருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டறிந்த ஓ.பன்னீர்செல்வம் அவசர அவசரமாக சென்னையிலிருந்து தேனிக்கு புறப்பட்டு பெரியகுளம் விரைகிறார்.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனை அடைகிறேன்.


ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் இந்திய அணி TAMIL NADU AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் பாமக UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை PMK CONGRESS கோவை INDIAN CRICKET TEAM PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI தமிழகம் COIMBATORE திருமாவளவன் பிரதமர் மோடி KEERTHY SURESH தேவர் வன்னியர் தமிழ்நாடு AJITH சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM OPS கைது அமமுக ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் சூர்யா SURIYA TAMIL ACTRESS THIRUMAVALAVAN நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா அஜித் தீபாவளி ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை பாலியல் தொல்லை மதுரை விடுமுறை திருப்பரங்குன்றம் தென்காசி கீர்த்தி சுரேஷ் CSK அன்புமணி தூத்துக்குடி கள்ளக்காதல் RAJINIKANTH