POLLING FLAMES

 

பெண்ணை சிகரெட்டால் சுட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை! மும்பை கொடூரம்!

3 years ago 05 டிசம்பர் 2022 07:15 AM | views : 282
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குர்லா பகுதியில் 42 வயது பெண் வசித்து வருகிறார். இந்த பெண் வீட்டில் தனியாக இருந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி அதிகாலை அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்த பெண் தனியாக இருப்பதை அறிந்து கொண்டு நோட்டமிட்டே இவர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.

ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மூன்று பேரும் பெண்ணை பலவந்தமாக கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், அந்த பெண்ணிடம் இயற்கைக்கு மாறன வகையில் உறவு கொண்ட அந்த நபர்கள், தொடர்ந்து கொடூரமான சித்தரவதையும் செய்துள்ளனர். தங்கள் சிகரெட்டுகளை வைத்து பெண்ணின் பிறப்புறுப்பு உள்ளிட்ட பாகங்களில் சூடு வைத்துள்ளனர்.



மேலும், கூர்மையான கத்தி உள்ளிட்டவற்றை வைத்து பெண்ணின் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கீறி தாக்கியுள்ளனர். இந்த கொடூரங்கள் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்த குற்றவாளிகள், இதை வெளியே தெரிவித்தால் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன அந்த பெண் போலீசிடம் புகார் அளிக்காமல் தனக்கு நேர்ந்த அவலத்தை அக்கம்பக்கத்தினரிடம் கூறி முறையிட்டுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தனியார் தொண்டு அமைப்பை தொடர்பு கொண்டு அவர்கள் உதவியுடன் போலீசிடம் புகார் அளித்துள்ளனர்.


அதன் அடிப்படையில் காவல்துறை கொலை முயற்சி, கூட்டு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மூவரும் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU PMK INDIAN CRICKET TEAM காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN கனமழை பாமக PARLIAMENT ELECTION கோவை முக ஸ்டாலின் CONGRESS திருமாவளவன் COIMBATORE அன்புமணி ராமதாஸ் தமிழகம் கொலை EDAPPADI PALANISWAMI கைது அமமுக வன்னியர் தமிழ்நாடு OPS தேவர் KEERTHY SURESH சீமான் பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM AJITH TAMIL ACTRESS ஓபிஎஸ் சூர்யா நெல்லை NELLAI THIRUMAVALAVAN கொரோனா SURIYA BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION அஜித் கள்ளக்காதல் மதுரை RAJINIKANTH விடுமுறை திருப்பரங்குன்றம் அன்புமணி தீபாவளி CSK தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தென்காசி பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ்