POLLING FLAMES

 

இரட்டை அர்த்தத்தில் பேசி 50 இளம்பெண்களின் கற்பை சூறையாடிய 54 வயது கார் டிரைவர்

11 months ago 23 மே 2025 11:07 AM | views : 237
ஜப்பானில் 54 வயதான கார் டிரைவர் ஒருவர் போதைபொருட்கள் கொடுத்து 50 இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு இவரது காரில் டோக்கியோவை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். அப்போது அவரிடம் நைசாக பேச்சுகொடுத்தார். பின்னர் இரட்டை அர்த்தத்தில் பேசி அந்த பெண்ணிற்கு கார் டிரைவர் தூக்க மாத்திரையுடன் போதைப்பொருளையும் கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அந்த பெண் சுயநினைவு இழந்தார்.

உடனே அவர் அந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை அவர் செல்போனில் வீடியோ எடுத்தார். இதேபோல அவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து பல பெண்களுக்கு இதேபோன்று இரட்டை அர்த்தத்தில் பேசி, போதை பொருட்கள் கொடுத்து அவர்கள் கற்பை சூறையாடியது தெரிய வந்துள்ளது. வீடு மட்டுமல்லாது தனது காரில் வைத்தும் பல பெண்களை அவர் சீரழித்து உள்ள விவரம் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையெல்லாம் அவர் வீடியோவாக எடுத்துள்ளார்.

மொத்தம் 50 இளம்பெண்கள் கார் டிரைவர் வலையில் சிக்கி தங்கள் கற்பை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் கார் டிரைவரின் செல்போன் மற்றும் லேப்டாப்பை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் கார் டிரைவர் ஏராளமான பெண்களை கற்பழித்து இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு பெண்ணுக்கு அவர் போதைபொருள் கொடுத்து ரூ.23 ஆயிரம் கொள்ளையடித்ததற்காக அவரை கைது செய்து இருந்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து டிசம்பர் மாதம் இளம்பெண்ணை கற்பழித்ததாக கைது செய்யப்பட்ட பின்னர்தான் கார் டிரைவரின் இந்த மோசமான செயல் வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU இந்திய அணி AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் கனமழை காங்கிரஸ் PMK UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் பாமக PARLIAMENT ELECTION கோவை முக ஸ்டாலின் CONGRESS INDIAN CRICKET TEAM COIMBATORE தமிழகம் EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் வன்னியர் தேவர் KEERTHY SURESH பிரதமர் மோடி OPS தமிழ்நாடு AJITH TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக சீமான் கைது NELLAI நெல்லை THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS SURIYA தீபாவளி ELECTION COMMISSION கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை அன்புமணி விடுமுறை தூத்துக்குடி தென்காசி வடகிழக்கு பருவமழை RAJINIKANTH அஜித் CSK மதுரை