POLLING FLAMES

 

கோவையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

5 months ago 14 நவம்பர் 2025 02:50 AM | views : 281
கோவை விமான நிலையம் அருகே இரவு நேரத்தில் 21 வயதான கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் என்ற கருப்பசாமி (வயது 30), அவருடைய தம்பி கார்த்தி என்ற காளீஸ்வரன் (20), தவசி (20) ஆகியோர் காதலனை அரிவாளால் வெட்டி, மாணவியை தூக்கிச்சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ், கார்த்தி, தவசி ஆகிய 3 பேரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதில் காலில் படுகாயம் அடைந்த அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவியும், வெட்டுக்காயம் அடைந்த அவருடைய காதலனும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர்கள் 2 பேரும் குணமடைந்தனர்.

இதையடுத்து கல்லூரி மாணவி மற்றும் அவருடைய காதலன் ஆகியோர் தங்களின் வீடுகளுக்கு திரும்பினர். அதுபோன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தவசி, சதீஸ் ஆகியோர் குணமடைந்ததால் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கார்த்தி என்ற காளீஸ்வரனுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கல்லூரி மாணவி, அவருடைய காதலனுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கார்த்திக்கு சிகிச்சை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே அடையாள அணிவகுப்பு நடத்தப்படும். அதன்பிறகு 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிப்போம். இந்த வழக்கில் கைதான 3 பேருக்கும் கோவில்பாளையத்தில் நடந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது பற்றி விசாரித்த பிறகு முழு விவரமும் தெரியவரும் என்றனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TAMIL NADU மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் AIADMK இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் கனமழை காங்கிரஸ் PMK UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை தமிழகம் CONGRESS INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் கொலை COIMBATORE EDAPPADI PALANISWAMI வன்னியர் கைது தமிழ்நாடு தேவர் TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH AJITH பிரதமர் மோடி அமமுக சீமான் OPS நெல்லை NELLAI BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN SURIYA TAMIL ACTRESS ஓபிஎஸ் சூர்யா கொரோனா சட்டசபை தேர்தல் திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION விடுமுறை மதுரை பாலியல் தொல்லை CSK தென்காசி வடகிழக்கு பருவமழை RAJINIKANTH அஜித் கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் தீபாவளி அன்புமணி தூத்துக்குடி