POLLING FLAMES

 

அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்- 6 பேர் உயிரிழப்பு

3 years ago 09 நவம்பர் 2022 05:46 AM | views : 237
நேபாளத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கங்கள் இந்தியாவின் புது டெல்லி மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன.

நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்களில் இதுவரைக்கும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து அந்நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டு இருக்கும் செய்தியில், நேபாள நாட்டின் மேற்கே நேற்று இரவு 9.07 மணி அளவில் 6.7 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இரவு 9:56 மணியளவில் 4.1 ரிக்டர் அளவிலான இன்னொரு நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் பின்னர் இன்று அதிகாலை 2. 12 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.6 ரிக்டர் ஆக பதிவாகி இருக்கிறது.


இந்த நிலநடுக்கங்களில் வீடு இடிந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்களில் மொத்தம் ஆறு பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்தியாவின் புது டெல்லி மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.

நேபாள நாட்டின் தலைநகர் காட்மண்டுவில் நேற்று காலை 4.37 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது 4.5 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி இருந்தது.
காத்மாண்டுவிலிருந்து வடகிழக்கே 155 கிலோ மீட்டர் தொலைவில் நேற்று காலையில் 4.37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் 5.1 ரிட்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது . இதேபோல் ஜூலை 31ஆம் தேதி காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கு 147 கிலோ மீட்டர் தொலைவில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. ஏப்ரல் 25ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் காத்மண்டு, பொகாரா நகரங்களுக்கு இடையே கடுமையான தாக்கம் உண்டானது. இதனால் அந்நாட்டு மக்களின் 8,964 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 22,000 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேபாள நாட்டில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மூன்று நிலநடுக்கங்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU இந்திய அணி AIADMK தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை காங்கிரஸ் PMK பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் CONGRESS INDIAN CRICKET TEAM கோவை PARLIAMENT ELECTION கொலை COIMBATORE திருமாவளவன் EDAPPADI PALANISWAMI OPS தேவர் பிரதமர் மோடி சீமான் அமமுக தமிழ்நாடு கைது KEERTHY SURESH AJITH வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM BIGG BOSS TAMIL சூர்யா TAMIL ACTRESS SURIYA தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா NELLAI THIRUMAVALAVAN ஓபிஎஸ் நெல்லை சட்டசபை தேர்தல் தென்காசி மதுரை திருப்பரங்குன்றம் CSK ELECTION COMMISSION பாலியல் தொல்லை RAJINIKANTH தீபாவளி கீர்த்தி சுரேஷ் அன்புமணி வடகிழக்கு பருவமழை விடுமுறை கள்ளக்காதல் தூத்துக்குடி அஜித்