Tamil News & POLLING

 

துருக்கி நிலநடுக்கம்- 248 மணி நேரத்துக்கு பிறகு 17 வயது சிறுமி உயிருடன் மீட்பு

3 years ago 16 பிப்ரவரி 2023 04:01 PM | views : 158
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ந்தேதி அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. 40 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நிலநடுக்கம் ஏற்பட்ட 248 மணி நேரத்துக்கு பிறகு, கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் அலினா என்ற 17 வயது சிறுமியை துருக்கி மீட்புக்குழுவினர் இன்று உயிருடன் மீட்டனர்.

அவருக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்படுகிறது. மீட்புக்குழுவினரை சிறுமியின் மாமா கட்டிப்பிடித்து நன்றி கூறினார்.மீட்கப்பட்ட சிறுமி ஆரோக்கியத்துடன் இருந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட நிலக்கரி சுரங்க தொழிலாளி அலி அக்டோகன் தெரிவித்தார். இந்த கட்டிடத்தில் ஒரு வாரமாக வேலை செய்து வருகிறோம். இடிபாடுகளில் இருந்து மனிதர்களின் சத்தம் கேட்கும் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தோம். உயிருள்ள ஒன்றை பார்க்கும்போதெல்லாம் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அது ஒரு பூனையாக இருந்தாலும் கூட மகிழ்ச்சி அடைவதாக அலி அக்டோகன் கூறினார்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AMMK ADMK TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் TTV DHINAKARAN MK STALIN டிடிவி தினகரன் AIADMK தமிழக வெற்றிக் கழகம் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS இந்திய அணி INDIAN CRICKET TEAM மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் சீமான் தமிழகம் கனமழை ரஜினிகாந்த் CONGRESS PMK UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION கொலை பிரதமர் மோடி கைது அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI கோவை SEEMAN தீபாவளி சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை அமமுக KEERTHY SURESH COIMBATORE திருமாவளவன் TAMIL ACTRESS THIRUMAVALAVAN மதுரை தென்காசி விடுமுறை AJITH ஓபிஎஸ் TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு திருநெல்வேலி கள்ளக்காதல் NELLAI நெல்லை திருப்பரங்குன்றம் தமிழக அரசு NORTHEAST MONSOON MADURAI 2024 T20 WORLDCUP வன்னியர் THOOTHUKUDI கீர்த்தி சுரேஷ் அஜித் வானிலை ஆய்வு மையம் நயினார் நாகேந்திரன் ASSEMBLY ELECTIONS தேவர் டாப் நியூஸ் டிரெண்டிங் OPS ELECTION COMMISSION