Tamil News & POLLING

 

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது ஐகோர்ட் உத்தரவு!

3 years ago 09 நவம்பர் 2022 12:10 PM | views : 157
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனே அமல்படுத்த வேண்டும் என, இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் சீதாராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டனர். பக்தர்கள் மட்டுமல்லாமல், அர்ச்சகர்கள் உட்பட யாரும் கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும், தடை உத்தரவை மீறி யாராவது செல்போன் பயன்படுத்தினால் பறிமுதல் செய்து மீண்டும் ஒப்படைக்க கூடாது என்று நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிடட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை உடனே அமல்படுத்த இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK ADMK டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி AIADMK TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM இந்திய அணி முக ஸ்டாலின் கனமழை சீமான் CONGRESS PMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN பாமக தமிழகம் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH SEEMAN அமமுக வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் கொலை EDAPPADI PALANISWAMI தீபாவளி COIMBATORE கோவை கைது NELLAI நெல்லை TAMIL ACTRESS மதுரை திருநெல்வேலி ஓபிஎஸ் THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM THOOTHUKUDI தமிழ்நாடு AJITH கள்ளக்காதல் தென்காசி திருமாவளவன் விடுமுறை SENGOTTAIYAN NORTHEAST MONSOON கொரோனா கீர்த்தி சுரேஷ் நயினார் நாகேந்திரன் OPS TAMIL CINEMA MADURAI அஜித் வானிலை ஆய்வு மையம் தேவர் 2024 T20 WORLDCUP தமிழக அரசு டிரெண்டிங் டாப் நியூஸ் ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION வன்னியர் பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம்