POLLING FLAMES

 

இளைஞரை காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி!

4 years ago 11 நவம்பர் 2021 08:14 AM | views : 247
மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட இளைஞரை காப்பாற்றி தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய அண்ணா நகர் ஆய்வாளர் ராஜேஸ்வரி!

சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையொன்றின்மீது மயங்கி விழுந்திருந்த நபரொருவரை, காவல் ஆய்வாளர் தோளில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை தற்போது காலை வரை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. மழை காரணமாக மக்கள் பலருக்கும் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. அந்தவகையில் தெருவோரங்களில் வசிப்போருக்கு இம்மழை கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிடைக்கும் இடங்களில் படுத்துறங்கி தங்களின் வாழ்வை நகர்த்துகின்றனர் அம்மக்கள். அந்தவகையில் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் வேலை செய்து வரும் உதயா என்பவர் கனமழை காரணமாக கல்லறைக்குள்ளேயே தங்கி இருந்திருக்கின்றார்.

கனமழை தொடர்ந்த காரணத்தால் உதயா உடல் நிலை பாதிக்கப்பட்டு அங்கேயே மயக்கமாகி இருக்கிறார். அவரை அங்கு கண்ட அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அங்கு சென்று, முறிந்து விழுந்த மரங்களை அகற்றி உதயாவை தனது தோளில் வைத்து ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். காவல் ஆய்வாளர் அவரை தூக்கி செல்லும் காட்சி, பார்ப்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் இந்திய அணி TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK ANBUMANI RAMADOSS TAMIL NADU காங்கிரஸ் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் PMK INDIAN CRICKET TEAM கனமழை பாமக PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை CONGRESS தமிழகம் கொலை அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI COIMBATORE திருமாவளவன் தமிழ்நாடு சீமான் அமமுக OPS KEERTHY SURESH தேவர் வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM கைது பிரதமர் மோடி AJITH ஓபிஎஸ் SURIYA சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் நெல்லை TAMIL ACTRESS சூர்யா NELLAI THIRUMAVALAVAN அன்புமணி ELECTION COMMISSION மதுரை வடகிழக்கு பருவமழை அஜித் கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் விடுமுறை தூத்துக்குடி தென்காசி பாலியல் தொல்லை தீபாவளி CSK RAJINIKANTH