INDIAN 7

Tamil News & polling

வன்னியர்களை இழிவுபடுத்திய சூர்யாவுக்கு அன்புமணி எச்சரிக்கை!

10 நவம்பர் 2021 10:39 AM | views : 73
Nature

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும் என எச்சரித்துள்ளார்.

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும் என எச்சரித்துள்ளார்.

நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அதில் ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயம் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும், இது வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருப்பதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இதே உணர்வும், மன நிலையும் உள்ள நிலையில், சூர்யாவிடமிருந்து அறமற்ற அமைதி மட்டுமே வெளிவந்து கொண்டிருப்பதால் தான் இந்த கடிதத்தை எழுத வேண்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

'ஜெய்பீம்' திரைப்படத்தில் காவல்துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருக்கிறது என்றும்,

உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்ற போதிலும், அந்த பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குரு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைக்கும் காட்சிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெய்பீம் திரைப்படமானது அமைதியை சிதைத்து சமூக மோதலை ஏற்படுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் இத்தகைய திரைப்படம் தங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருப்பது நியாயமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை... என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

படைப்பாளிகளை விட அவர்களுக்கு வாழ்க்கை தரும் ரசிகர்கள் தான் பெரியவர்கள். இந்தப் படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தைக் காட்டினால், அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும் என்றும் அந்த கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்