POLLING FLAMES

 

சிறுமியை உறவுக்கு பின் கொன்று விட்டு சேர்ந்து தேடிய காதலன்!

4 years ago 15 அக்டோபர் 2021 04:26 AM | views : 256
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் பகுதியில் ஷோபனா (13) என்ற சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார்.


அரசுப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த 7ஆம் தேதி முதல் காணவில்லை.

இதனால் பல்வேறு பகுதியில் தேடியும் கிடைக்காததால் சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடிய உறவினர்கள், சிறுமியின் மாமா பாலசுப்பிரமணியன் வீட்டின் பின்புறம் உள்ள வாய்க்காலில் சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சென்ற போலீசார், சிறுமி அணிந்திருந்த லெக்கின்ஸ் பேண்ட் கிழிந்து ரத்தக்கரை இருந்த நிலையில் அவரது சடலத்தை மீட்டனர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதலில் தடயங்கள் கிடைக்காமல் தடுமாறிய போலீசார், பின்னர் சிறுமி வசித்த பகுதியினர் சிலரை கண்காணிப்பு வளைத்தில் கொண்டுவந்து அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதனிடையே மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி சிறுமியின் சந்தேக மரணம் வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

இந்த தகவல் அறிந்த அதே தெருவைச் சேர்ந்த பிரபாகர் என்ற இளைஞர் (25) வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்றது தெரியவந்தது. பின்னர் பேருந்து நிலையத்தில் அவரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.



விசாரணையில், அச்சிறுமியும் உறவினரான பிரபாகரும் கடந்த 3 மாதங்களாக அவரை காதலித்து வந்ததும், அச்சிறுமியுடன் பலமுறை உடலுறவு கொண்டுள்ளதும் தெரியவந்தது. சம்பவத்தன்று சிறுமி ஷோபாவை தனியாக அழைத்து பிரபாகர் உடலுறவு கொண்டுள்ளார். பின்னர், அப்பகுதி இளைஞர்களுடன் சிறுமி சகஜமாக பேசுவதை கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது வேட்டியால் சிறுமியின் கழுத்தை நெறித்துள்ளார்.

இதில் மயக்கமடைந்த சிறுமியை அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார். வாய்க்காலில் கிடந்த நீரால் சிறுமி மூச்சுமுட்டி உயிரிழந்துள்ளார். அவரை காணவில்லை என்றதும் உறவினர்களுடன் சேர்ந்து தானும் சிறுமியை தேடுவது போல் நடித்தது அம்பலமாகியுள்ளது.



பிரபாகரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, போலீசார் அவரைக் கைது செய்து நாகப்பட்டினம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் வெளிவந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU ரஜினிகாந்த் காங்கிரஸ் கனமழை PMK தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN பாமக PARLIAMENT ELECTION கோவை INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் CONGRESS COIMBATORE EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை தமிழகம் அன்புமணி ராமதாஸ் தேவர் வன்னியர் அமமுக KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி OPS சீமான் தமிழ்நாடு கைது சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS கொரோனா SURIYA தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL ஓபிஎஸ் சூர்யா நெல்லை AJITH THIRUMAVALAVAN NELLAI தென்காசி விடுமுறை தீபாவளி பாலியல் தொல்லை CSK மதுரை ELECTION COMMISSION அஜித் அன்புமணி RAJINIKANTH கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை