POLLING FLAMES

 

நீலகிரி 4 பேரை அடித்துக் கொன்ற டி23 புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது!

4 years ago 14 அக்டோபர் 2021 05:51 PM | views : 192
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றியுள்ள தேவன், மசினகுடி பகுதிகளில் 4 பேரை பேர் மற்றும் 30க்கும் மேற்பட்ட மாடுகளை வேட்டையாடிய T23 புலியை பிடிக்க வனத்துறையினர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கடுமையாக போராடி வருகின்றனர்.



சிறிய பள்ளங்கள், நீரோடைகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ள முட்புதர்கள் போன்றவை மட்டுமின்றி மூங்கில் புதர்களிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால், ஆட்கொல்லி புலியானது யார் கண்ணிலும் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. புலியை விரைவில் சுட்டுப் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், புலியை சுட்டுப் பிடிக்கக் கூடாது என்று வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, இரண்டு கும்கி யானைகள், மூன்று மோப்ப நாய்கள் உதவியுடன் தேடப்பட்டு வந்த டி23 புலி திடீரென மாயமானது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து தீவிரமாக நடைபெற்ற தேடுதல் வேட்டையில், மசினகுடி வனப்பகுதியில் பதுங்கி இருந்த அந்த புலி தெப்பகாடு, முதுமலை வழியாக தான் வாழ்ந்த போஸ்பாரா வன பகுதிக்கு சென்று விட்டது கண்டறியப்பட்டது.



போஸ்பாரா பகுதியில் வைக்கபட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் டி23 புலி பதிவாகியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், முதுமலைப் புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் சுற்றி வந்த டி23 புலிக்கு மருத்துவக்குழுவினர் உதவியுடன் சற்றுமுன் மயக்க ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக அண்ணாமலை சென்னை CHENNAI பாஜக BJP ANNAMALAI TVK ADMK AMMK உதயநிதி ஸ்டாலின் தவெக MK STALIN பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் PMK கனமழை AIADMK முக ஸ்டாலின் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் ANBUMANI RAMADOSS TAMIL NADU பாமக தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி காங்கிரஸ் PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM CONGRESS அன்புமணி ராமதாஸ் கோவை திருமாவளவன் COIMBATORE கைது EDAPPADI PALANISWAMI தேவர் தமிழகம் வன்னியர் அமமுக KEERTHY SURESH கொலை OPS சீமான் THIRUMAVALAVAN ஓபிஎஸ் வடகிழக்கு பருவமழை சட்டசபை தேர்தல் மதுரை TAMIL ACTRESS பிரதமர் மோடி கொரோனா BIGG BOSS TAMIL RAJINIKANTH நெல்லை NELLAI AJITH சூர்யா விடுமுறை திருப்பரங்குன்றம் CSK கள்ளக்காதல் தென்காசி அஜித் SURIYA அன்புமணி கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி தமிழ்நாடு ELECTION COMMISSION தமிழக சட்டசபை தேர்தல் 2024 T20 WORLDCUP TAMILAGA VETTRI KAZHAGAM