POLLING FLAMES

 

கேரளாவில் மனைவி மீது பாம்பை ஏவி கொலை செய்த வழக்கில் கொடூர கணவனுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!!

4 years ago 13 அக்டோபர் 2021 07:20 AM | views : 266
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே பாம்பை கடிக்க வைத்து மனைவியை கொன்ற வழக்கில் குற்றவாளியான கணவர் சூரஜுக்கு கொல்லம் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே அஞ்சல் பகுதியை சேந்தவர் விஜயசேனன். அவரது மகள் உத்ரா(25). இவருக்கும் பத்தனம்திட்டா மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்த சூரஜ் (27) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த வருடம் மே 7ம் தேதி உத்ராவை பாம்பு கடித்ததாக கூறி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் உத்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறி அவரது தந்தை விஜயசேனன் அப்போதைய கொல்லம் எஸ்பி ஹரிசங்கரிடம் புகார் அளித்தார். இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் சூரஜ் தான் சொத்துக்காக உத்ராவை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சூரஜ் மீது கொலை செய்தல், துன்புறுத்துதல், வனவிலங்கு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், சொத்துக்காக உத்ராவை கொலை செய்ததாகவும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் இருந்து பாம்பை வாங்கி வீட்டில் வைத்திருந்ததாகவும் கூறினார். இதையடுத்து சுரேசையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை கொல்லம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ் தீர்ப்பு அளித்தார். அதில், உத்ரா கொல்லப்பட்ட வழக்கில் கணவர் சூரஜ்க்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் குற்றவாளியாவார்,' எனத் தீர்ப்பளித்தார். இந்த நிலையில் இன்று குற்றவாளி சூரஜுக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி மனோஜ் தீர்ப்பளித்துள்ளார். 4 ஆயுள் தண்டனையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, கணவன் சூரஜுக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK இந்திய அணி ANBUMANI RAMADOSS TAMIL NADU ரஜினிகாந்த் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK UDHAYANIDHI STALIN பாமக முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM கோவை CONGRESS COIMBATORE EDAPPADI PALANISWAMI கொலை திருமாவளவன் தமிழகம் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM OPS பிரதமர் மோடி வன்னியர் தேவர் அமமுக KEERTHY SURESH சீமான் சட்டசபை தேர்தல் SURIYA கைது THIRUMAVALAVAN தமிழக சட்டசபை தேர்தல் தீபாவளி ஓபிஎஸ் TAMIL ACTRESS கொரோனா NELLAI சூர்யா நெல்லை AJITH BIGG BOSS TAMIL ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH CSK விடுமுறை மதுரை கள்ளக்காதல் அஜித் திருப்பரங்குன்றம் தூத்துக்குடி தென்காசி அன்புமணி