Tamil News & POLLING

 

சபரிமலை கோவிலில் நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் ஐகோர்ட்டு கண்டனம்

1 year ago 06 டிசம்பர் 2024 12:13 PM | views : 155
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதனிடையே, பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டதாக கேரள நாளிதழில் இன்று செய்தி வெளியானது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தபோது நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டதாகவும், அவர் தரிசனத்திற்கான முன்வரிசையில் மாலை கோவில் நடை அடைக்கும்வரை நின்றுள்ளார். இதனால், பிற பக்தர்கள் பல மணிநேரம் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாகவும், அவர்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளானதாகவும் செய்தி வெளியானது.

இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு கேரள ஐகோர்ட்டு இன்று தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, நடிகர் திலீப்பிற்கு சபரிமலை கோவிலில் எந்த அடிப்படையில் விஐபி தரிசன வசதி வழங்கப்பட்டது என்று கோர்ட்டு கேள்வி எழுப்பியது. மேலும், நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கியதற்கு சபரிமலை தேவசம் போர்டு மற்றும் போலீசாருக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, நடிகர் திலீப்பிற்கு சபரிமலை கோவிலில் விஐபி தரிசனம் வழங்கப்பட்டது தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்க போலீசாருக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்டு, கோவிலின் சிசிடிவி காட்சிகளை நாளைக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK ADMK பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி AIADMK TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி முக ஸ்டாலின் INDIAN CRICKET TEAM கனமழை சீமான் ரஜினிகாந்த் CONGRESS PMK UDHAYANIDHI STALIN பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை கைது COIMBATORE கோவை சட்டசபை தேர்தல் தீபாவளி KEERTHY SURESH கொலை EDAPPADI PALANISWAMI SEEMAN அமமுக தமிழ்நாடு ஓபிஎஸ் AJITH நெல்லை கள்ளக்காதல் திருநெல்வேலி NELLAI THIRUMAVALAVAN திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM விடுமுறை மதுரை TAMIL ACTRESS தென்காசி THOOTHUKUDI NORTHEAST MONSOON தேவர் வன்னியர் MADURAI OPS ELECTION COMMISSION 2024 T20 WORLDCUP டாப் நியூஸ் கொரோனா திருப்பரங்குன்றம் ASSEMBLY ELECTIONS நயினார் நாகேந்திரன் அஜித் டிரெண்டிங் தமிழக அரசு பாலியல் தொல்லை வானிலை ஆய்வு மையம் TAMIL CINEMA கீர்த்தி சுரேஷ் SENGOTTAIYAN