POLLING FLAMES

 

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் இளம்பெண் பலி!

18 hours ago 01 மே 2026 04:09 PM | views : 29

கேரளத்தில் மூளையைத் தின்னும் ஆமிபா தொற்றால் இளம்பெண் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ‘அமீபிக் மெனிங்கோ என்செப் ஹாலிடிஸ்’ எனப்படும் மூளையை தின்னும் அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை பெற்று வந்த 26 வயது இளம்பெண், வெள்ளிக்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பலியானதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


பலியானவர் ஆலப்புழா மாவட்டம், அம்பலப்புழா அருகே உள்ள நீர்க்குன்னத்தைச் சேர்ந்த ஆர்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். செவிலியராகப் பணிபுரிந்து வந்த அவர், கடந்த மாதம் அமீபிக் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் ஆலப்புழாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். வியாழக்கிழமை இரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மாநிலத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் தற்காலிகமாக குறைந்திருந்த நிலையில், இந்த மரணம் நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நிலவி வரும் தட்பவெப்ப நிலையை கருத்தில் கொண்டு, புதிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.




மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS கனமழை PMK AIADMK ரஜினிகாந்த் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN பாமக தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION தமிழகம் CONGRESS கோவை COIMBATORE EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் கொலை கைது NELLAI அமமுக OPS TAMILAGA VETTRI KAZHAGAM AJITH திருமாவளவன் தமிழ்நாடு KEERTHY SURESH நெல்லை பிரதமர் மோடி INDIAN CRICKET TEAM RAJINIKANTH கொரோனா சீமான் TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL தேவர் ஓபிஎஸ் வடகிழக்கு பருவமழை வன்னியர் SURIYA தூத்துக்குடி தென்காசி மதுரை திருப்பரங்குன்றம் அன்புமணி CSK ELECTION COMMISSION விடுமுறை அஜித் சூர்யா THIRUMAVALAVAN தீபாவளி கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ்