POLLING FLAMES

 

திருமாவளவன் செய்வதைத்தான் ருத்ரதாண்டவம் படத்தில் காட்டியிருக்காங்க!

4 years ago 05 அக்டோபர் 2021 05:03 AM | views : 194
ருத்ரதாண்டவம் படத்தை பார்க்கும்போது திருமாவளவன் எப்படி இன்றைக்கு பட்டியல் இன மக்களை ஏமாற்றுகிறார் என்பது போன்ற காட்சி உள்ளதைப் பார்க்கிறோம் என்று பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் வேலூர் இப்ராஹீம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ருத்ரதாண்டவம் திரைப்படத்தை நான் பார்த்தேன். இன்று திருமாவளவன் என்ன காரியத்தை செய்கிறார்? தலித் மக்களை ஏமாற்றுகிறார். தலித் மக்களின் மத்தியில் பல்வேறு தவறான கருத்துகளைப் பரப்பி, பிற சாதியினருக்கு மத்தியில் மோதல் போக்கை ஏற்படுத்துகிறார். அதுபோன்ற நிகழ்வுகள் அந்தத் திரைப்படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. ருத்ர தாண்டவம் படம் பட்டியலின மக்களின் நியாயமான உணர்வுகளையும் அவர்களின் பாதிப்புகளையும் காட்டுகிறது. அதேவேளையில் திருமாவளவன் போன்றவர்கள் பட்டியல் மக்களை வைத்து சாதிவெறியை உண்டாக்கி அந்த மக்களை கல்வி அறிவில் மேம் படுத்தாமல், மோசமான சூழல் அந்த சமூகத்திற்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அந்த செயலை ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் காட்டியுள்ளனர். அதனால் அந்தப் படத்தை நாங்கள் வரவேற்கிறோம்.


இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்தில் திருமாவளவன் போன்ற ஒருவர் வரக்கூடிய காட்சிகூட உள்ளது. அவர்கள் எந்த நோக்கத்தில் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. அந்தப் படத்தை பார்க்கும்போது திருமாவளவன் எப்படி இன்றைக்கு பட்டியல் இன மக்களை ஏமாற்றுகிறார் என்பது போன்ற காட்சி உள்ள சூழலை பார்க்கிறோம். வெளிப்படையாக பட்டியல் இன மக்களை தவறாகப் பயன்படுத்தக்கூடிய காட்சி ருத்ர தாண்டவம் படத்தில் வைத்துள்ளனர்.” என்று வேலூர் இப்ராஹீம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU இந்திய அணி ANBUMANI RAMADOSS AIADMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK காங்கிரஸ் பாமக PARLIAMENT ELECTION கோவை INDIAN CRICKET TEAM CONGRESS முக ஸ்டாலின் கொலை தமிழகம் அன்புமணி ராமதாஸ் COIMBATORE திருமாவளவன் EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH OPS பிரதமர் மோடி அமமுக தேவர் தமிழ்நாடு சீமான் கைது வன்னியர் TAMILAGA VETTRI KAZHAGAM THIRUMAVALAVAN சூர்யா சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் தீபாவளி SURIYA AJITH NELLAI BIGG BOSS TAMIL நெல்லை கொரோனா கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் CSK தூத்துக்குடி விடுமுறை பாலியல் தொல்லை அஜித் ELECTION COMMISSION தென்காசி RAJINIKANTH அன்புமணி கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை மதுரை