POLLING FLAMES

 

இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை - அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி

1 year ago 20 பிப்ரவரி 2025 04:40 PM | views : 222
சென்னை,

மும்மொழிக்கொள்கை விவகாரம் தமிழகத்தில் தற்போது பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. பள்ளியின் நிர்வாக குழு தலைவராக விசிக தலைவர் திருமாவளவன், செயல்பட்டு வருகிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்? என கேள்வியெழுப்பிய அண்ணாமலை, இந்த விவகாரத்தில் திருமாவளவனும் இரட்டை வேடம் போடுவதாக தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருந்தார்.

அண்ணாமலையின் இந்த பதிவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எதிர்வினையாற்றியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக பேசியதாவது;

"அண்ணாமலை பரபரப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு ஊடக கவன ஈர்ப்பு முக்கியமானதாக இருக்கிறது. ஒரு நாகரிக அணுகுமுறை என்பதை முற்றாக தவிர்த்துவிட்டு யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்கிற நிலைப்பாட்டை எடுத்து அவர் அரசியல் செய்கிறார்.

அவருடைய அணுகுமுறை என்பது வியப்பாக இருக்கிறது. இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை. நான் சி.பி.எஸ்.இ. பள்ளி நடத்தவில்லை. எங்கள் இடத்தில் ஒரு நிறுவனம் பள்ளி நடத்த அனுமதி கேட்டுள்ளனர். அந்த பள்ளியில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. வகுப்புகளும் தொடங்கவில்லை. அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது. அந்த இடம் எங்களுடைய இடம் என்பதால் என் பெயரை பயன்படுத்தியுள்ளனர். ஒரு மாணவர் கூட சேராத பள்ளியில் மும்மொழி கட்டாயமாக வைத்துள்ளதாக, ஊடக விமர்சனத்திற்காக அண்ணாமலை பேசி வருகிறார்."

இவ்வாறு அவர் பேசினார்.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் AIADMK இந்திய அணி பாமக PMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் கனமழை தமிழகம் CONGRESS கோவை INDIAN CRICKET TEAM அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கொலை திருமாவளவன் COIMBATORE EDAPPADI PALANISWAMI அமமுக தேவர் KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி சீமான் வன்னியர் தமிழ்நாடு கைது OPS AJITH BIGG BOSS TAMIL SURIYA THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் கொரோனா சூர்யா நெல்லை தமிழக சட்டசபை தேர்தல் NELLAI ஓபிஎஸ் TAMIL ACTRESS அன்புமணி தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION தீபாவளி பாலியல் தொல்லை தென்காசி மதுரை அஜித் கள்ளக்காதல் CSK திருப்பரங்குன்றம் RAJINIKANTH விடுமுறை கீர்த்தி சுரேஷ்