POLLING FLAMES

 

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அலுவலர்களை நியமிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.

4 months ago 09 டிசம்பர் 2025 04:06 PM | views : 231
மக்கள் தொகை கணக் கெடுப்புப் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்த உள்ளது.இப்பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 கட்டங்களாக தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் கடந்த 2-ந்தேதி மத்திய அரசு தெரிவித்தது. 2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மாநில மற்றும் யூனியன் - பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்களுக்குள் வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். இரண்டாம் கட்டமாக 2027-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு அதிகாரிகளை வருகிற ஜனவரி 15-ந்தேதிக்குள் நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்தியப் பதிவாளர் ஜெனரல் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான அதிகாரிகள் நியமனத்தை 2026-ம் ஆண்டு ஜனவரி 15-ந்தேதி முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. சுமார் 700 முதல் 800 பேர்களுக்கு ஒரு கணக்கெடுப்பாளருக்குப் பணி ஒதுக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு 6 கணக்கெடுப்பாளர்களுக்கும் மேற்பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகள்-1990-ன் விதி 3-ன் படி, ஆசிரியர்கள், எழுத்தர்கள் அல்லது மாநில அரசு மற்றும் உள்ளூர் அதிகார சபையின் எந்தவொரு அதிகாரியும் கணக்கெடுப் பாளராக நியமிக்கப்படலாம். கணக்கெடுப்பாளரை விட உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரிகள் மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும். ஜனவரி 15-ந்தேதிக்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளை நியமிப்பதை உறுதி செய்ய மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK இந்திய அணி கனமழை தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் PMK பாமக PARLIAMENT ELECTION CONGRESS முக ஸ்டாலின் கோவை INDIAN CRICKET TEAM திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI தமிழகம் தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி KEERTHY SURESH கைது OPS வன்னியர் அமமுக தேவர் சீமான் கொரோனா ஓபிஎஸ் சூர்யா SURIYA சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL நெல்லை THIRUMAVALAVAN NELLAI AJITH TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் கீர்த்தி சுரேஷ் மதுரை பாலியல் தொல்லை விடுமுறை அஜித் தென்காசி CSK அன்புமணி திருப்பரங்குன்றம் தூத்துக்குடி ELECTION COMMISSION தீபாவளி RAJINIKANTH வடகிழக்கு பருவமழை கள்ளக்காதல்