POLLING FLAMES

 

முல்லை பெரியாற்றில் புதிய அணை திட்டத்திற்கு மத்திய அரசு துணை போகக்கூடாது - டி.டி.வி.தினகரன்

1 year ago 03 செப்டம்பர் 2024 02:05 PM | views : 246
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,மத்திய நீர்வளத்துறையின் அணைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கேரள அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து 12 மாதங்களில் ஆய்வு செய்ய பரிந்துரைத்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.


மத்திய அரசின் அணைப் பாதுகாப்பு சட்டத்தின்படி முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்கான கால அவகாசம் 2026 ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், 12 மாதங்களில் அணையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய பரிந்துரைக்க வேண்டிய அவசியம் என்ன? என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த ஆய்வு எனும் பெயரில் தென் மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தோடு மாநில உரிமை பறிபோகும் சூழல் ஏற்படும் நிலையிலும், மவுனம் காப்பது தமிழக விவசாயிகளுக்கு தி.மு.க. அரசு இழைக்கும் துரோகம் ஆகும்.


எனவே, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஆய்வு செய்வதற்கு வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசிற்கு துணை போகக் கூடாது எனவும் நீர்வள ஆணையத்தையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கான பரிந்துரையை மத்திய நீர்வள ஆணையம் திரும்பப் பெற வேண்டும் - முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு துணை போகக் கூடாது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் MK STALIN பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU UDHAYANIDHI STALIN கனமழை INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் காங்கிரஸ் PMK தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் CONGRESS PARLIAMENT ELECTION கோவை EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் தமிழகம் கொலை COIMBATORE திருமாவளவன் OPS வன்னியர் தமிழ்நாடு கைது பிரதமர் மோடி அமமுக சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH தேவர் BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை AJITH சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் SURIYA கொரோனா திருப்பரங்குன்றம் அன்புமணி ELECTION COMMISSION தென்காசி மதுரை RAJINIKANTH கள்ளக்காதல் விடுமுறை CSK பாலியல் தொல்லை அஜித் தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தீபாவளி கீர்த்தி சுரேஷ்