POLLING FLAMES

 

ஆட்சியை பிடிப்பது யார்..? - பீகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை

5 months ago 13 நவம்பர் 2025 03:32 AM | views : 235
பாட்னா,

பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6-ந் தேதி மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.09 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளில் நேற்று முன்தினம் 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. பலத்த பாதுகாப்புடன் 45 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 69 சதவீத வாக்குகள் பதிவாகின. இது, முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை விட அதிகம் ஆகும். அதிக அளவாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாவட்டமான கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 76.23 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.

இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகளும், அதனை தொடர்ந்து மின்னணு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. 243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில், ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை. பீகாரில் புதிதாக ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்து நாளை பகல் 12 மணிக்குள் தெரிய வரும்.

பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரியவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி AIADMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் கனமழை PMK காங்கிரஸ் பாமக CONGRESS அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் தமிழகம் INDIAN CRICKET TEAM கோவை திருமாவளவன் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM கைது தேவர் OPS அமமுக பிரதமர் மோடி வன்னியர் தமிழ்நாடு சீமான் AJITH தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் BIGG BOSS TAMIL TAMIL ACTRESS SURIYA NELLAI நெல்லை THIRUMAVALAVAN கொரோனா தீபாவளி தூத்துக்குடி திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION விடுமுறை கள்ளக்காதல் CSK வடகிழக்கு பருவமழை அஜித் கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை அன்புமணி தென்காசி RAJINIKANTH மதுரை