Tamil News & POLLING

 

கூகுள் மேப்பால் கோவா செல்வதற்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய பீகார் குடும்பம்

1 year ago 07 டிசம்பர் 2024 12:10 PM | views : 168
பீகாரில் வசித்து வரும் குடும்பம் ஒன்று காரில் கோவாவுக்கு கூகுள் மேப் உதவியுடன் சென்றுள்ளது. அப்போது கூகுள் மேப் தவறாக வழியை காண்பித்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர்கள் வழிமாறி கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சிக்கிக் கொண்டனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால், மொபைல் நெட்வொர்க் வேலை செய்யாததால் இரவு நேரம் முழுவதும் அவர்களுக்கு என்ன செய்வதென்று அறியாமல் அச்சமடைந்து காரிலே இருந்துள்ளனர்.

அடுத்த நாள் காலை விடிந்தவுடன், மொபைல் நெட்வொர்க் உள்ள இடத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் சுமார் 3 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளனர். பின்னர் அவசர உதவி எண்ணை தொடர்புகொண்டு, விவரத்தை தெரிவித்துள்ளர். அதைத் தொடர்ந்து உள்ளூர் போலீசார் அவர்களை காட்டில் இருந்து பாதுகாப்பாக மீட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் கூகுள் மேப்பைப் பின்தொடர்ந்ததாகவும், இந்த சம்பவம் பரேலி - பிலிபித் நெடுஞ்சாலையில் நடந்ததாகவும், காரில் குழந்தைகள் உள்பட சுமார் ஏழு பேர் இருந்ததாக போலீஸ் அதிகாரி நாயக் தெரிவித்தார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI MK STALIN AMMK எடப்பாடி பழனிசாமி ADMK பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் காங்கிரஸ் உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN AIADMK மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் கனமழை சீமான் ரஜினிகாந்த் CONGRESS PMK UDHAYANIDHI STALIN பாமக தமிழகம் அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கொலை அமமுக KEERTHY SURESH தீபாவளி COIMBATORE கோவை SEEMAN EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை கைது சட்டசபை தேர்தல் THOOTHUKUDI TAMIL ACTRESS கள்ளக்காதல் AJITH மதுரை NELLAI தென்காசி TAMILAGA VETTRI KAZHAGAM திருநெல்வேலி திருமாவளவன் THIRUMAVALAVAN ஓபிஎஸ் நெல்லை விடுமுறை தமிழ்நாடு NORTHEAST MONSOON தமிழக அரசு TAMIL CINEMA டாப் நியூஸ் நயினார் நாகேந்திரன் டிரெண்டிங் கீர்த்தி சுரேஷ் MADURAI SENGOTTAIYAN தேவர் ASSEMBLY ELECTIONS OPS பாலியல் தொல்லை அஜித் திருப்பரங்குன்றம் கொரோனா வானிலை ஆய்வு மையம் வன்னியர் 2024 T20 WORLDCUP ELECTION COMMISSION