Tamil News & POLLING

 

சென்னையில் 5-ம் வகுப்பு மாணவியை கடுமையாக தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

4 months ago 24 அக்டோபர் 2025 12:10 PM | views : 144
சென்னை,

சென்னை புழுதிவாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமியை, கடந்த 9-ந்தேதி வகுப்பறையில் பேனாவின் மையை கீழே கொட்டியதாக கூறி பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். தரையை துடைப்பதற்கு பயன்படுத்தப்படும் மாப்பை வைத்து சிறுமியை தலைமை ஆசிரியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில், சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை இந்திரா காந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AMMK காங்கிரஸ் டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN AIADMK பாராளுமன்ற தேர்தல் ADMK MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN தமிழகம் ரஜினிகாந்த் CONGRESS சீமான் PMK கனமழை இந்திய அணி பாமக பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கைது அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI தீபாவளி அமமுக சட்டசபை தேர்தல் COIMBATORE வடகிழக்கு பருவமழை SEEMAN கோவை KEERTHY SURESH திருமாவளவன் நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS மதுரை THIRUMAVALAVAN NELLAI திருநெல்வேலி தென்காசி விடுமுறை AJITH ஓபிஎஸ் தமிழ்நாடு கள்ளக்காதல் ELECTION COMMISSION நயினார் நாகேந்திரன் அஜித் தமிழக அரசு OPS THOOTHUKUDI கீர்த்தி சுரேஷ் டாப் நியூஸ் டிரெண்டிங் தேவர் NORTHEAST MONSOON வன்னியர் திருப்பரங்குன்றம் MADURAI 2024 T20 WORLDCUP வானிலை ஆய்வு மையம் ASSEMBLY ELECTIONS