Tamil News & POLLING

 

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார் சீமான்

1 year ago 28 பிப்ரவரி 2025 04:18 PM | views : 146
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜராகவில்லை.

இதையடுத்து, சீமான் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும், தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதால் நாளை (இன்று) போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன். அடுத்த வாரம் ஆஜராவேன் என்று சீமான் நேற்று தெரிவித்து இருந்தார்.

சீமான் இன்று போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகி விளக்கம் அளிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால், போலீசாரின் அறிவிப்புபடி இரவு 8 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளதாக சீமான் தெரிவித்திருந்தார்.

சேலத்தில் இருந்து இன்று சென்னை வந்த சீமான் வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு மேல் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதற்காக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் புறப்பட்டார்.

இதனால், வடபழனியில் காவல் நிலையத்திற்கு செல்லும் வழியிலேயே கார் தடுத்து நிறுத்தப்பட்டது. பிறகு, 9 மணியளவில் சீமான் மீண்டும் காவல் நிலையம் நோக்கி புறப்பட்டார்.

இந்நிலையில், நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான வழக்கில் சீமான் விசாரணைக்கு ஆஜரானார்.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI ADMK AMMK AIADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் PMK இந்திய அணி தமிழகம் கனமழை UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM CONGRESS ரஜினிகாந்த் சீமான் பாமக PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி COIMBATORE வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI கோவை கைது அமமுக தீபாவளி NELLAI சட்டசபை தேர்தல் KEERTHY SURESH கொலை AJITH TAMIL ACTRESS தமிழ்நாடு நெல்லை தென்காசி THIRUMAVALAVAN திருமாவளவன் TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் திருநெல்வேலி மதுரை OPS SEEMAN SENGOTTAIYAN THOOTHUKUDI டிரெண்டிங் டாப் நியூஸ் நடிகை தேவர் திருப்பரங்குன்றம் கொரோனா ஓபிஎஸ் கீர்த்தி சுரேஷ் வன்னியர் 2024 T20 WORLDCUP விடுமுறை வானிலை ஆய்வு மையம் MADURAI தமிழக அரசு NORTHEAST MONSOON அஜித் ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS TAMIL CINEMA