Tamil News & POLLING

 

த.வெ.க-வின் ரமலான் நோன்பு : நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் ஆதவ் அர்ஜூனா நேரில் ஆய்வு

1 year ago 06 மார்ச் 2025 03:07 PM | views : 156
சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நாளை மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று நோன்பு திறந்து வைக்கிறார். மேலும், நோன்பு திறப்பில் கலந்து கொள்ளும் இஸ்லாமியர்களுக்கும் அவர் விருந்தளிக்க உள்ளார்.

இந்நிலையில், நளை நடைபெறவுள்ள நோன்பு நிகழ்ச்சிக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சாரம் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 2000 பேர் வரை கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, டேபிள், நாற்காலி எதுவும் இன்றி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் தரையில் அமர்ந்து நோன்பு திறந்து தொழுகையில் ஈடுபடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாளை நடைபெறவுள்ள இஃப்தார் நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள 15 பள்ளிவாசல் இமாம்களுக்கு கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விஜய் வருகை ஒட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை தவெக TVK ANNAMALAI AMMK ADMK AIADMK டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி TAMIL NADU MK STALIN TTV DHINAKARAN காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் INDIAN CRICKET TEAM முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் ANBUMANI RAMADOSS இந்திய அணி தமிழகம் கனமழை UDHAYANIDHI STALIN PMK ரஜினிகாந்த் பாமக சீமான் பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் CONGRESS அமமுக EDAPPADI PALANISWAMI COIMBATORE NELLAI கொலை கைது KEERTHY SURESH சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION தீபாவளி கோவை தென்காசி THIRUMAVALAVAN கள்ளக்காதல் திருமாவளவன் மதுரை நெல்லை விடுமுறை TAMIL ACTRESS திருநெல்வேலி தமிழ்நாடு OPS TAMILAGA VETTRI KAZHAGAM AJITH SEEMAN THOOTHUKUDI ஓபிஎஸ் ASSEMBLY ELECTIONS TAMIL CINEMA ELECTION COMMISSION வானிலை ஆய்வு மையம் டாப் நியூஸ் கொரோனா கீர்த்தி சுரேஷ் டிரெண்டிங் தமிழக அரசு தேவர் திருப்பரங்குன்றம் MADURAI நடிகை NORTHEAST MONSOON அஜித் 2024 T20 WORLDCUP SENGOTTAIYAN வன்னியர்