POLLING FLAMES

 

புஷ்பா 2 படத்தால் பங்குச் சந்தையில் சில நொடிகளில் கொட்டிய 426 கோடி!!

1 year ago 03 டிசம்பர் 2024 08:08 AM | views : 270
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் ரிலீசுக்குத் தயாராக உள்ளது. டிசம்பர் மாதம் நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகிறது. அதற்கு முன்னதாகவே இந்த படத்தின் முன்பதிவும் திரையரங்குகளில் தொடங்கியுள்ளது.


டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கிய முன்பதிவு மூலம் தயாரிப்பாளர்கள் சுமார் 25 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர். முதல் நாளில் மட்டும் முன்பதிவு மூலம் படத் தயாரிப்பாளர்கள் ரூ.60 கோடி வரை சம்பாதிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பான் இந்தியா லெவலில் இந்தப் படத்திற்கு ஆரம்பத்திலேயே ரூ.150 முதல் 200 கோடி வரை வசூல் ஆகலாம்.




புஷ்பா 2 முன்பதிவு பங்குச் சந்தையிலும் எதிரொலித்திருக்கிறது. தியேட்டர் நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ் பங்குகள் சுமார் 3 சதவீதம் உயர்ந்துள்ளன. இதன் காரணமாக சில நிமிடங்களில் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.426 கோடி அதிகரித்துள்ளது. இந்தப் படம் பான் இந்தியா அளவில் ஒரு பரபரப்பை உருவாக்கி இருக்கிறது என்பது பங்குச் சந்தை தாக்கத்தின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.




ஏராளமான மக்களை தியேட்டருக்கு இழுக்கும் சக்தி புஷ்பா 2 படத்துக்கு உள்ளது. இதனால் தியேட்டர்கள் லாபம் ஈட்ட சிறந்த வாய்ப்பு உள்ளது. வருமானம் அதிகரித்தால், தியேட்டர் நிறுவனத்தின் பங்குகள் உயரும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.




மும்பை பங்குச்சந்தை தரவுகளின்படி, வெள்ளியன்று பிவிஆர் ஐனாக்ஸின் பங்குகள் ரூ.1540-ல் முடிவடைந்தது. திங்கட்கிழமை இந்நிறுவனத்தின் பங்குகள் ரூ.1,558-ல் துவங்கியது. பின்னர் சுமார் 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. வர்த்தகத்தின்போது பங்கு விலை அதிகபட்சமாக ரூ.1583.40 வரை சென்றது. மதியம் 2 மணியளவில் 2.25 சதவீதம் உயர்வுடன் ரூ.1,574.65க்கு வர்த்தகமானது. டிசம்பர் 18, 2023 அன்று, இந்நிறுவனத்தின் பங்குகள் 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.1,829 ஐ எட்டியது.




தற்போது, பிவிஆர் ஐனாக்ஸின் பங்குகள் புஷ்பா 2 படத்தின் மூலம் புதிய சாதனையை எட்டக்கூடும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர். பிவிஆர் ஐநாக்ஸ் பங்குகளின் விலை உயர்வு காரணமாக, அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பும் உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை பிவிஆர் ஐனாக்ஸின் சந்தை மதிப்பு ரூ.15,122.79 கோடியாக காணப்பட்டது. திங்கட்கிழமை வர்த்தகத்தின்போது ரூ.15,548.97 கோடியை எட்டியது. அதாவது சில நிமிடங்களில் பிவிஆர் ஐநாக்ஸின் சந்தை மதிப்பு ரூ.426.18 கோடி அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் இன்னும் உயர்வைக் காணலாம். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK இந்திய அணி பாமக ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கனமழை தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் PMK PARLIAMENT ELECTION தமிழகம் INDIAN CRICKET TEAM CONGRESS கோவை அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் COIMBATORE கொலை திருமாவளவன் EDAPPADI PALANISWAMI கைது பிரதமர் மோடி வன்னியர் தேவர் தமிழ்நாடு OPS சீமான் KEERTHY SURESH AJITH அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் TAMIL ACTRESS BIGG BOSS TAMIL SURIYA கொரோனா THIRUMAVALAVAN சூர்யா தமிழக சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை CSK ELECTION COMMISSION விடுமுறை தீபாவளி கள்ளக்காதல் அஜித் தென்காசி கீர்த்தி சுரேஷ் மதுரை பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் தூத்துக்குடி அன்புமணி வடகிழக்கு பருவமழை RAJINIKANTH