POLLING FLAMES

 

ஐயப்பன் பற்றி இசைவாணி பாடியதில் தவறு இல்லை- செல்வப்பெருந்தகை

1 year ago 29 நவம்பர் 2024 08:18 AM | views : 208
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களை நம்பாமல் இயந்திரங்களை நம்பி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. விஞ்ஞானத்தை பா.ஜ.க தவறான முறையில் பயன்படுத்துகிறது.

இந்த தேசம் அதானி, அம்பானிக்காக இருக்கிறதா? பா.ஜ.க அரசு பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் முறையாக தேர்தல் நடத்தப்படவில்லை.

நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஓட்டுப் பதிவு எந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. இனிவரும் காலங்களில் பா.ஜ.க. அரசு வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ் மொழி, திருக்குறள் பற்றி பேசும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் உத்திரமேரூர் கல்வெட்டில் உள்ள குடஓலை முறையை நடைமுறைபடுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இசைவாணி 5 ஆண்டுகள் முன்பு ஐயப்பன் பாடல் ஒன்றை பாடி உள்ளார். அதில் எந்த தவறும் இல்லை. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.சை சேர்ந்தவர்கள் புகார் கொடுத்து வருகின்றனர்.

இசைவாணி தவறாக பாடி இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

இசைவாணிக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு தமிழக அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுத்ததற்கு காரணம் அவர் ஒரு மொழியையும், இனத்தையும் இழிவு படுத்தி பேசியிருந்தார். இசைவாணி பாடிய பாடல் மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் இல்லை. நானும் இந்து தான். நானும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று இருக்கிறேன். இந்த விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ். வேண்டுமென்றே பெரிதுபடுத்தி வருகிறது.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் முன்னேறி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK TAMIL NADU ANBUMANI RAMADOSS கனமழை தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் PMK பாமக PARLIAMENT ELECTION கோவை CONGRESS முக ஸ்டாலின் கொலை அன்புமணி ராமதாஸ் COIMBATORE EDAPPADI PALANISWAMI திருமாவளவன் தமிழகம் அமமுக தமிழ்நாடு OPS KEERTHY SURESH சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் பிரதமர் மோடி வன்னியர் கைது NELLAI TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் AJITH கொரோனா ஓபிஎஸ் சூர்யா SURIYA நெல்லை தீபாவளி ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் RAJINIKANTH அஜித் பாலியல் தொல்லை மதுரை கீர்த்தி சுரேஷ் CSK அன்புமணி விடுமுறை தென்காசி தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை